Bigg Boss Tamil6:பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்..யாருமே எதிர்பார்க்காத செம ட்விஸ்ட்!

சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், முக்கியமான போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் என்ற டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கிற்காக பிக் பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.

இந்த டாஸ்க்கிற்கான நரகவாசிக்கு ஜெயிலும் சொர்க்கவாசிக்கு அழகான மெத்தை மற்றும் கூடாரம் போடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் நிகழ்ச்சி பத்தாவது வாரத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில், இந்த வாரம் யார் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்தனர். அதில் அமுதவாணன், அசீம் இருவரும் சிறப்பாக விளையாடியதாக மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஷிவின் ஆகியோர் ஒரே குரலாக கூறினார்கள். அதனால், அசீம், அமுதவாணன் இருவரும் இந்த வாரம் சேவ் ஆகிவிட்டார்கள்.

வெளியேறிய போட்டியாளர்

வெளியேறிய போட்டியாளர்

மேலும், கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடந்த நிலையில், இந்த வாரம், கன்சேக்ஷன் ரூமில் தனித்தனியாக நாமினேஷன் நடந்தது. இதில் அசீம், மணிகண்டன், ஏடிகே, ஜனனி, விக்ரமன், ரக்ஷிதா ஆகியோர் நாமினேஷனில் சிக்கினார்கள். அதில் ஏடிகே மற்றும் ஜனனி இருவரும் ஹாட் சீட்டில் அமர்ந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று ஜனனி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது.

யாரும் எதிர்பார்க்காத வெளியேறினார்

யாரும் எதிர்பார்க்காத வெளியேறினார்

இலங்கைப் பெண்ணான ஜனனி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது, ஜனனியின் ஆர்மிகள் ஒட்டுமொத்தமாக சேர்த்து கொண்டு அவரை பிரபலமாக்கினார்கள். இதனால், என்னத்தான் ஜனனி நாமினேஷனில் சிக்கினாலும், அவரை ரசிகர்கள் எப்படியாவது காப்பாற்றி விட்டார்கள். கடந்த வாரம் கூட ஆயிஷா மற்றும் ஜனனி ஹாட் சீட்டில் அமர்ந்த போது கடைசி நேரத்தில் அவர் காப்பாற்றப்ப்டடார். இப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறும்படம் போடவா?

குறும்படம் போடவா?

இதையடுத்து,இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது.அதில், நான் பார்த்த அன்ஃபேர் கேமை பற்றி உங்களிடம் செல்கிறேன், அனைவரும் பார்த்து ஜனனி தான் வென்றார் என்று கூறினார்கள். அசீம் கண்ணால பாத்தேனு சொன்னார் என்று கூற, ஆமாம் சார் நான் கண்ணாலப்பார்த்தேன் என்று அசீம் சொல்ல, குறும்படம் போடவா என கேட்டுவிட்டு கமல் குறும்படத்தை போடுகிறார்.

அசீமை வறுத்தெடுத்த கமல்

அசீமை வறுத்தெடுத்த கமல்

அந்த குறும்படத்தை பார்த்து விட்டு.. இதில் அசீம் கண்ணால பார்க்க வாய்ப்பு இருக்கா? அசீம் நீங்களே சொல்லுங்க என்கிறார். ஜனனியை பார்த்தா உங்களுக்கு ஜனனி மட்டும் தான் தெரியும், விளையாட்டை பார்த்தீர்கள் என்றால் விளையாட்டு புரியும் என்று இந்த வாரமும் அசீமை வறுத்தெடுத்துள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க தயாராகி விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X