பிக் பாஸ் வீடுமாதிரி தெரியல..ஜோடி ஜோடியா சுத்துறாங்க.. ராபர்ட் மாஸ்டரை வெளுத்துவிட்ட வனிதா!
சென்னை : பிக் பாஸ் வீடு மாதிரி தெரியல எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துறாங்க என்று வனிதா கடுமையாக விமர்சித்து உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில், அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன், அஸீம், ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா, ராம் ராமசாமி, தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், மணிச்சந்திரா, விஜே கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன், மைனா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்

வனிதா ரிவ்யூ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் என்கிற முறையில் நடிகை வனிதா விஜயகுமார், பிக் பாஸ் வீட்டில் தினமும் நடப்பதை ரிவ்யூ செய்து வருகிறார். அதில், பிக் பாஸ் வீட்டில் முந்தைய சீசன்களில் நாம் பார்த்து இருக்கிறோம் ஒரு ஜோடி தான் சுத்தும், ஆனால் இந்த சீசனில் ஆளு ஆளுக்கு ஜோடி போட்டு சுத்துகிறார்கள்.

பாஸ் வீடா இல்ல பார்க்கா..பீச்சா
இது பிக் பாஸ் வீடா இல்ல பார்க்கா..பீச்சானு தெரியாத அளவுக்கு ஜோடி ஜோடியா இருக்காங்க, எதுக்கு தைரியம் இருக்கோ.. இல்லையோ இந்த விஷயத்தில் அனைவரும் தைரியமாக இருக்குற மாதிரி தெரிகிறது. குறிப்பா ராபர்ட் மாஸ்டரை பார்த்து ரச்சிதா ஹாலிவுட் ஹீரோ என்பதும், அவரு ரச்சித்தாவை செல்லமா 'முக்குதி' என்று வர்ணித்துகிட்டே இருக்கிறார்.

வரம்பு மீறுகிறார்
அதேபோல, நிவாஷினி மற்றும் அசல் ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறார்கள். இதுவீட்டில் இருப்பவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கும், ஆனால் இருவரும் நண்பர்கள் என்கிறார்கள். உண்மையில் இவர்கள் நண்பர்கள் தானே என்பது போகப்போகத்தான் தெரியும். இருந்தாலும், அசல் சில நேரங்களில் பெண்களிம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார் என்றார்.

எனக்கு பிடிக்கவில்லை
அதேபோல, மகேஸ்வரி இந்த சீசனின் ஸ்டாங்கான போட்டியாளர் அவர் அழுது கொண்டே இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. அவர் ஸ்டாங்காக இருப்பதால் தான், மற்ற போட்டியாளர்கள் அவரை வெளியில் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் மகேஸ்வரி கவனத்தை விளையாட்டில் செலுத்த வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











