அம்பேத்கருக்கு கடிதம் எழுதிய விக்ரமன்..புறக்கணித்த விஜய் டிவி..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் நேற்றைய டாஸ்கில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி இருந்தார். இது நேரலையில் ஒளிபரப்பான நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகாததால், ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 73 நாட்களை கடந்து விட்டதால், இனிமேல் டாஸ்க் கடுமையாக இருக்கும் என்று பார்த்தால் தற்போது வீட்டில் சின்ன புள்ளத்தனமாக விளையாடி வருகிறார்கள்.
தற்போது வீட்டில் கனாகாணும் காலங்கள் டாஸ்க் நடந்து வருகிறது. இதில், அசீம்,தனம்,மணிகண்டன், ஷிவின்,ஏடிகே ஆகியோர் மாணவர்களாகவும், மைனா, அமுதவாணன், கதிர், விக்ரமன் ஆகியோர் ஆசிரியர்களாகவும் உள்ளனர்.

கலங்கிய ஷிவின்
நேற்று பிக் பாஸ் வீட்டில் கடிதம் எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அனைவரும் அவர்களின் குடும்பத்தை நினைத்து உருக்கத்துடன் கடிதம் எழுதினார்கள். அதில் ஷிவின் தனது அக்காவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அன்புள்ள அக்கா, என் கூட பிறந்த பாவத்திற்கு எண்ணால உனக்கு கஷ்டம் மட்டும் தான் என்று கண்ணீருடன் படித்திருந்தார்.

அம்மாதான் குழந்தை
அதன் பின் ரச்சித்தா, தனது அம்மாவை நினைத்து கலங்கிய கண்ணீருடன் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அம்மா எனக்காக நீ நிறைய கஷ்டப்பட்டு இருக்க, இன்னமும் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்க. எனக்கு இதுக்கப்புறம் என்ன நடக்குன்னு தெரியாது, குழந்தையோட அமைப்பு இருக்கான்னுகூட தெரியாது. என் அம்மாதான் எனக்கு குழந்தை, அந்த குழந்தைய கடைசி வரை நான் நல்லா பாத்துகணும்.3

ஆறுதல் கூறிய ரசிகர்கள்
கடவுள் கிட்ட கேட்டுகிறது ஒன்னே ஒண்ணுதான் என்ற வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே படித்தார். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் ரச்சித்தா நேற்று மனம்விட்டு கதறி அழுததைப்பார்த்து ரசிகர்கள் அப்படியே உடைந்து போனார்கள். இணையத்தில் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம்
இப்படி பிக் பாஸ் வீட்டில் அனைத்துப்போட்டியாளர்களும் கடிதத்தை படித்தனர். ஆனால், விக்ரமன் எழுதி படித்தது மட்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாவில்லை. அதாவது விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், அன்புள்ள புரட்சியாளர் அம்பேத்கருக்கு... ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டில் என, கடிதத்தை எழுதி படித்திருந்தார். அது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை.

புறக்கணித்தது ஏன்?
அனைவருக்கும் வழங்கப்பட்ட வாய்ப்பு விக்ரமனுக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என கேள்வியை நெட்டிசன்கள் இணையத்தில் கேட்டுள்ளனர். இதற்கு பலர் எப்போதுமே விஜய் டிவி ஒரு தலைபட்சமாகவே தான் செயல்படும் என்று சிலரும், இது அரசியலாகிவிடும் என்பதால் அதை ஒளிபரப்பி இருக்க மாட்டார்கள் என்று சிலரும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











