ஷெரினா கையில் இருப்பது என்ன விஸ்கியா? பிக் பாஸ் வீட்டில் இதெல்லாம் கிடைக்குமா?
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரினா கையில் வைத்திருந்த கிளாஸ் இப்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் தலைவர் பதிவிக்கான போட்டி நடைபெற்றது. இதில், நிவாஷினி, குயின்ஸி, மணிகண்டன் போட்டியிட்டனர். இதில், கயிற்றுக்குள் புகுந்து சென்று குடுவையில் நீரை நிரப்பும் டாஸ்க்கை விரைவாக செய்து முடித்த மணிகண்டன் இந்த வாரத்தின் தலைவரானார்.
இதையடுத்து, ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனி கேப்டனை போட்டுள்ளார். இதில் கிச்சன் டீமின் கேப்டனாக ரச்சிதா மகாலட்சுமி இருக்கிறார்.

செல்ல சண்டை
ரச்சிதா கிச்சன் டீமுக்கு வந்ததால் ராபர்ட் மாஸ்டரும் நானும் அதே டீமுக்கு போகிறேன் என வந்து விட்டார். இதையடுத்து, ராபர்ட்-ரச்சிதா இடையே சாப்பாடு விஷயத்தில் செல்லச்சண்டை நடந்துள்ளது. ராபர்ட் மாஸ்டர் பசிக்கிறது சாப்பாடு என்ன இருக்கு? என்று கேட்டபோது ரச்சிதா கஞ்சி இருக்கு சாப்பிடுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து, ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா சமைக்கும் வரை நான் சாப்பிடவே மாட்டேன் என்று கோபித்துக்கொண்டு போய்விட்டார்.

சமாதானப்படுத்திய ஷெரினா
இதைக் கேள்விப்பட்ட ஷெரினா, ராபர்ட் மற்றும் ரச்சிதா சமாதானப்படுத்துகிறார். அப்போது ஷெரீனா கையில் ஒரு கிளாஸில் ஏதோ இருக்கிறது அதை குடித்துக்கொண்டே, மாஸ்டர் நீங்க ஒன்னும் ஸ்கூல் பையன் இல்ல, இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கீங்க, இவ்வளவு பெரிய தாடி இருக்கு சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி, நீங்கள் சாப்பிடாததால் ரச்சித்தாவும் சாப்பிடாம இருக்காங்க என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார்.

ஷெரினா கையில் விஸ்கியா?
அப்போது, ராபர்ட் மாஸ்டர் ஷெரீனா கையில் வைத்திருப்பதை பார்த்து என்ன என கேட்கிறார். அதற்கு ஷெரினா விஸ்கி என பதில் அளிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னது ஷெரினா கையில் வைத்திருப்பது விஸ்கியா? என்றும், அதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் கிடைக்குதா என்று பார்வையாளர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அடுத்த சர்ச்சை
சனிக்கிழமை எபிசோடில் ஷெரினாவை சரவெடி போல வெடித்து தள்ளிய கமல், முதல்ல மயங்கி விழுந்தீங்க, பிறகு ஆட வந்தீங்க, அசீம் அத்தனை வெயிட் போட்டு உங்க மேல உக்காந்தது கூட உங்களுக்குப் பிரச்சினையில்லையா என கேள்வியால் துளைத்தார். இதனால், உண்மையில் ஷெரினாவுக்கு அடிபடவில்லையா ? நடித்தாரா என பலர் ட்ரோல் செய்தனர். தற்போது கையில் இருப்பது விஸ்கி என கூறி அடுத்த சர்ச்சையில் அவரே வாண்டடாக சிக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











