நிக்சனுடன் ரொமான்ஸ்.. சர்ச்சையில் சிக்கிய ஐஷூ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ள ஐஷூ வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ந் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

bigg boss tamil season 7 contestant aishu salary

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அக்‌ஷயா, விஷ்ணு விஜய் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக உள்ளனர். தற்போது நிகழ்ச்சி 7 வது வாரத்தை எட்டி உள்ளது.

ஐஷூ வெளியேறினார்: கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகள் எழுந்ததால், அது குறித்து கமல் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ரசிகர்கள் நினைத்தது போல மாயா அண்ட் டீமை கமல் வெளுத்து வாங்கிவிட்டார். இதையடுத்து, குறைந்த வாக்குகள் பெற்று ஐஷூ இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

குறைந்த வாக்கு: திறமையான பெண்ணான ஐஷூ வெளியேறியதற்கு முக்கிய காரணம், நிக்ஸன் - ஐஷூ இடையேயான உறவு தான். அது நட்பா, காதலா என வீட்டில் இருப்பவர்களே குழம்பி போனார்கள். இருவரும் கண்ணாடி முன் நின்று முத்தமிட்டுக்கொண்டது, இரட்டை அர்த்தத்தில் பேசியது வரை இணையவாசிகள் இருவரின் செயல்பாடுகளையும் கண்டித்தனர். இதையடுத்து, அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

ஐஷூ சம்பளம்: இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் 42 நாட்கள் இருந்த ஐஷூ வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆகையால், இவருக்கு ஜி.எஸ்.டி போக, சுமார் 8 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் ரொமான்ஸ் பண்ணதுக்கு சம்பளமா என கேலியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X