பிக் பாஸ் 7ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்ப புகைப்படம்.. கண்ணு பட போகுது.. சுத்திப் போடுங்க!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பாதி கிணறை தாண்டி உள்ளது. முந்தைய சீசன்களைவிட இந்த சீசனில் சர்ச்சை சற்று அதிகமாகவே உள்ளது.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது, மாயா மற்றும் பூர்ணிமா விவகாரம் என அடுத்தடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

bigg boss tamil season 7 contestant archana family photos

நடிகை அர்ச்சனா: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார் அர்ச்சனா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே, பலர் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற போது, அர்ச்சனா மட்டும் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்க கூடாது என கூறினார். அதன் காரணமாகவே ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு சப்போர்ட் செய்தனர்.

பிக் பாஸ் சீசன் 7: அதுமட்டுமில்லாமல், மாயா மற்றும் பூர்ணிமா டீமிற்கு அர்ச்சனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இதனால், கமல்ஹாசன் வரும் நாட்களில் ரசிகர்களிடம்இருந்து அர்ச்சனாவுக்கு தொடர்ந்து கைதட்டல்கள் கிடைத்து வந்தது. இது மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு வெறுப்பாக இருந்து.

bigg boss tamil season 7 contestant archana family photos

ரசிகர்கள் ஆதரவு: ஆனால், கடந்த வாரம் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே நடந்த மோதலில் கமல்ஹாசன் பெரும்பாலும் நிக்சனுக்கு தான் சப்போர்ட் செய்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனாவை கமல் சரியாக பேசவிடவில்லை என அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் ஆகியோரை தான் கமல் சற்று கடுமையாக கண்டித்திருந்தார்

குடும்ப போட்டோ: இப்படி ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கு ஆதரவு ஒரு பக்கம் பெருகிக் கொண்டு இருக்க, அர்ச்சனாவின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கண்ணு பட போகுது.. சுத்திப் போடுங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

bigg boss tamil season 7 contestant archana family photos

ராஜா ராணி சீரியல்: தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் அர்ச்சனா என்ற வில்லி கேரக்டரில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் இருந்து திடீரென விலகிய அர்ச்சனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X