Bigg Boss 7 Day 1: வெளியேறிய 6 போட்டியாளர்கள்..டேஞ்சர் ஜோனில் 2 பேர்.. வீட்டில் நடந்தது என்ன?
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில் முதல் நாளான நேற்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசனில் வழக்கமாக ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்கும் இந்த முறை ஸ்மால் ஹவுஸ், பிக் ஹவுஸ் என இரண்டு வீடு இருக்கிறது. இதில் ஸ்மால் பாஸ் இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கிய பிஸ் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இரண்டு வீடு: பிக் பாஸ் சீசன் 7ன் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல் கேப்டனாக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என ரவீனா, வினுஷா, நிக்சன், ஐஷு, அனன்யா, பவா செல்லத்துரை ஆகிய 6 போட்டியாளர்கள் ஸ்மால் வீட்டுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். அவர்கள் மாற்றப்பட்டது மட்டுமில்லாமல் அதிரடியான பல ரூல்ஸ் போடப்பட்டுள்ளது.
புது..புது ரூல்ஸ்: அதாவது ஒவ்வொரு வாரமும் ஆறு ஹவுஸ்மேட்ஸ் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், அந்த 6 பேரும், பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லக்கூடாது, எந்த டாஸ்க்கிலும் பங்கு பெற கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது, மற்ற ஹவுஸ்மெட்டுகளுக்கு மூன்று வேளைக்கான உணவை அவர்களே தயார் செய்ய வேண்டும். வீட்டின் ஹவுஸ் கிளீனிங் மற்றும் பாத்ரூம் கிளீனிங் வேலைகள் என அனைத்தையும் அந்த ஆறு பேர் மட்டுமே செய்ய வேண்டும் என அடுக்கடுக்கான ரூல்ஸ்கள் போடப்பட்டுள்ளது.
முதல் வாரமே நாமினேஷன்: இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. வழக்கமாக முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் என்பதால், முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால், முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.
டேஞ்சர் ஜோன்: இதில், அதன்படி ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இதில் பிரதீப் மற்றும், யுகேந்திரன் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனர்.
சர்ச்சையில் சிக்கிய விசித்ரா: நடிகை விசித்ரா நாமினேஷனின் போது, அனன்யா மோசமான உடை அணிந்து கொண்டு இருக்கிறார். இந்த வீட்டில் பெரியவர்கள், இளம் வயதினர் அனைவரும் இருக்கும் போது இப்படி அவர் உடை அணிவது சரியில்லை என்று பேசி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











