Bigg Boss 7: ஓவர் ஆட்டிடியூட் காட்டிய விஷ்ணு.. வார்த்தைய பார்த்து யூஸ் பண்ணுங்க.. வார்னிங் கொடுத்த பூர்ணிமா!
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில், விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக துவங்கி உள்ளது.
இதில் விஜய் டிவி பிரபலங்கள் உட்பட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலநது கொண்டுள்ளனர்.
இரண்டாவது ப்ரோமோ: தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் Know your Housemates என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூர்ணிமா ரவி மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பங்கேற்கின்றனர். இதில் பேசும் பூர்ணிமா, கூல் சுரேஷ் பேச்சைக் குறிப்பிட்டு, இது டிபேட் நிகழ்ச்சி, என்னுடைய பாயிண்டை அவரும், அவருடைய பாயிண்ட்டை நானும் விமர்சிக்க வேண்டும். கூல் சுரேஷ் ஏதோ மேடை பேச்சாளர் மாதிரி நான் இதை பண்ணேன், அதை பண்ணேன் என்று பேசுகிறார் என்றார்.
வார்னிங் கொடுத்த பூர்ணிமா: இதையடுத்து, விஷ்ணுவிடம் பேசும் பூர்ணிமா ரவி, கொஞ்சம் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்க என்று சொல்ல, இதைக் கேட்ட விஷ்ணு, டாஸ்க் முடிந்ததும் இவங்க சில விஷயங்களை முன் வைக்கிறார்கள். நீ சொன்னதை ஃபாலோ பண்ணனும்னா எல்லோரும் அதை பண்ணுவாங்க. ஆனால் என்ன புரிதலோ அதுதான் இந்த கேம் என கூறுகிறார். இதனால் கடுப்பான பூர்ணிமா எடுக்குறதும், எடுக்காததும் அவங்கவங்க விருப்பம். சண்டை போடுற ஐடியால நான் இல்ல என தெரிவித்து அங்கிருந்து கிளம்பி மாயாவிடம் செல்கிறார்.

ஓவர் ஆட்டிடியூட் காட்டி விஷ்ணு: அங்கே, விஷ்ணு வந்து என்னதான் இருந்தாலும் நீ தோத்துட்டன்னு சொல்றாரு. அது என்ன நோக்கத்துல வரும் அந்த வார்த்தை என கேட்கும் காட்சிகளுடன் இரண்டாவது ப்ரோமோ முடிவடைகிறது. ஆக மொத்தம் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டின் வில்லனாக விஷ்ணு மாறிவிட்டதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முதல் நாளில் இருந்தே விஷ்ணு ஓவர் ஆட்டிடியூட் காட்டி வருவதாக நெட்டிசன்ஸ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல் ப்ரோமோ: முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், விஷ்ணு மாயா இருவரும் விவாதிக்கின்றனர். சக போட்டியாளரான பிரதீப்புக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று விஷ்ணு காட்டு கத்தல் கத்த. டென்ஷனான மாயா நீ என்ன என் மாமனா மச்சானா என்று கேட்கிறார். பின்னர் விஷ்ணு, இந்த விவாதத்தில் பிரதீப் பெயரை இழுக்க, பின்னர் பிரதீப் மற்றும் விஷ்ணுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











