Bigg Boss 7: இவரு என்ன என் மாமனா மச்சானா.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட விஷ்ணு!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஷ்ணுவிற்கும் மாயாவிற்கும் காரசாரமான விவாதம் நடக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது, இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் இந்த வார கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை கவராத 6 பேர் ஸ்மால் ஹவுசிற்கு அனுப்பப்பட்டனர்.

bigg boss tamil season 7 Day 3 october 4th promo 1 fans reactions

பிக் பாஸ் சீசன் 7: வழக்கமாக முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் என்பதால், முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால், முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.

7 பேர் நாமினேஷன்: இதில், அதன்படி ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இதில் பிரதீப் மற்றும், யுகேந்தரன் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனர்.

மூக்கை நுழைக்கும் பிரதீப்: மேலும் வந்ததில் இருந்து எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து வரும் பிரதீப்பிற்கும் விஜய்க்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. டிஸ்கஸ் செய்யாமல் எப்படி சாப்பாடு மெனு கொடுக்கலாம் என்று எனக்கு தனியாக சிக்கன் வேண்டும் என்று ஸ்மால் பாஸ் நபர்களிடம் வாக்குவாதம் செய்தார். அவர்களோ உங்களுக்கு எல்லாம் தனியாக சமைக்க முடியாது உங்கள் வீட்டு நபர்களுடன் டிஸ்கஸ் செய்து கொடுங்கள் நாங்கள் சமைக்கிறோம் என்றனர். இப்படி பலரிடமும் பிரதீப் நேற்று பிரச்சனையை கிளப்பினார்.

bigg boss tamil season 7 Day 3 october 4th promo 1 fans reactions

முதல் ப்ரோமோ: இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், Know Your Housemate என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் விஷ்ணு மாயா இருவரும் விவாதிக்கின்றனர். சக போட்டியாளரான பிரதீப்புக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று விஷ்ணு காட்டு கத்தல் கத்த. ஒரு கட்டத்தில் டென்ஷனான மாயா 'நீ என்ன என் மாமனா மச்சானா' என்று கேட்கிறார். பின்னர் விஷ்ணு, இந்த விவாதத்தில் பிரதீப் பெயரை இழுக்க, பின்னர் பிரதீப் மற்றும் விஷ்ணுவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X