பிக் பாஸ் ரவீனா.. மணிக்கு இது பெய்டு ஹனிமூன்.. ட்விட்டரில் காரி துப்புறாங்க.. வனிதா ஆவேசம்!

சென்னை: ரவீனா மற்றும் மணி இது பெய்டு ஹனிமூன் போல பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர் என்று வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இந்த சீசன் இப்போது தான் தொடங்கியது போல இருந்தது. ஆனால் மளமளவென 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது.

அந்த அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சை அதிகமாக இருந்ததால் சுவாரஸ்யமாக சென்றுகொண்டு இருப்பதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Bigg Boss tamil season 7 day 76 reveiw by vanitha vijayakumar

பிக் பாஸ் சீசன் 7: பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்றுதான் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகும் ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இதில் அனன்யா மிட் வீக்கில் எலிமினேட் ஆனார். அதே கூல் சுரேஷூம் பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

வனிதா விஜயகுமார்: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார், பிக் பாஸ் சீசன் 3ல எனக்கு கவின் மற்றும் சாண்டி இரண்டு பேரும் வத்திக்குச்சி என்று பெயர் வைத்தார்கள். அப்போது கமல்ஹாசனே இரண்டு முறை சொல்லுங்க வத்திக்குச்சி என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இந்த சீசன்ல மட்டும் பட்டப்பெயர் வைக்கக்கூடாது என்று சொல்வது ரொம்ப தப்பு என்று சொல்கிறாரே அது ஏன்.

ட்விட்டரில் காரி துப்புறாங்க: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து பார்த்தா ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து இருக்கிறார்கள். சோ இதெல்லாம் சாதாரண விஷயம். இதை கமல் பெரிய விஷயமா பேசுவதைப் பார்க்கும் போது என்னடானு நினைக்கத் தோன்றுகிறது. ட்விட்டரில போனாலே அவரை கழுவி ஊத்துறாங்க. நேற்று தெலுங்கு பிக் பாஸ் பைனல் முடிஞ்சது, அவ்வளவு சூப்பராக நாகார்ஜூன் அந்த நிகழ்ச்சியை கொண்டு போய் இருந்தார். ஆனால், இங்கு ஒரே ஆண்டவர் புராணமாக இருக்கிறது.

பெய்ட்டு ஹனிமூன்: பிக் பாஸ் வீட்டில் விக்ரம் அவரை எத்தனை பேர் கடுமையாக திட்டினாலும், கேலி கிண்டல் செய்தாலும்,பிக் பாஸ் டைட்லை பெற விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். ஆனால், அதே வீட்டில் இருக்கும் ரவீனா மற்றும் மணிக்கு இது பெய்ட்டு ஹனிமூன் போல, ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்னாடி இது யாருக்கு கிடைக்கும் என்று நடிகை வனிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X