Bigg Boss Tamil 7 Exclusive: இன்னைக்கு இந்த டைமுக்கு வெயிட்டான சம்பவம் கன்ஃபார்ம்.. பிக் பாஸ் 7!
சென்னை: பிக் பாஸ் ரசிகர்களை ரொம்ப காலம் காக்க வைத்த நிலையில், இன்று மாலை அசத்தல் அப்டேட் வெளியாகும் என விஜய் டிவி அதிகாரப்பூர்வ ட்வீட் போட்டு விட்டது.
பிக் பாஸ் முதல் சீசன் முதல் 6வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், 7வது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க ரெடியாகி விட்டார்.

இந்தியன் 2, கல்கி, எச். வினோத் படம், மணிரத்னம் படம், விக்ரம் 3 என ஏகப்பட்ட சினிமா படங்கள் வரிசைக் கட்டி காத்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்கப் போவது உறுதியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்: இந்த ஆண்டு மீண்டும் பிக்பாஸ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 7:7 மணிக்கு எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் வருகிறது என்கிற அதிகாரப்பூர்வ போஸ்ட் தற்போது பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.
கெஸ்ஸிங் போட்டியாளர்: இந்த சீசன் 7ல் விஜய் டிவியின் ஜாக்குலின், நடிகர் பப்லு, ரேகா நாயர், ஷகிலாவின் மகள் மிலா, விசித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கெஸ்ஸிங் போட்டியாளர்கள் லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது. விரைவில் உறுதியான போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கும்.
செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் பிக் பாஸ் ப்ரமோஷனை ஆரம்பிக்க விஜய் டிவியும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் வேகமெடுத்துள்ளன.
சர்ச்சையும் சாதனையும்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், பல போட்டியாளர்கள் இந்த பிளாட்ஃபார்மை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். கவின், ஹரிஷ் கல்யாண், ஷிவானி நாராயணன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, லாஸ்லியா, ஜனனி, மைனா, ரச்சிதா என ஏகப்பட்ட பேர் சினிமா மற்றும் சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கமல்ஹாசனின் ப்ரமோ சமீபத்தில் படமாக்கப்பட்ட நிலையில், அந்த ப்ரமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











