இது ஹோம்லியா? கிளாமரானே தெரியலயேப்பா! இணையத்தில் ரவுண்டு வரும் பிக்பாஸ் பூர்ணிமாவின் வீடியோ

சென்னை: விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் சவாலான போட்டியாளராக விளங்கியவர் பூர்ணிமா ரவி. இந்த நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளர் தொடர்ந்து இரண்டு முறை கேப்டன்சி டாஸ்க்கிற்கு சக போட்டியாளர்களால் சிபாரிசு செய்யப்பட்ட போட்டியாளர் என்றால் அது பூர்ணிமா ரவியைத்தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பூர்ணிமா, பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக முயற்சி செய்தும் வருகின்றார். இதற்காக அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். தமிழ் சினிமா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் கவனத்தை ஈர்த்த ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகினார்.

Poornima Ravi Bigg Boss Poornima

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் குணாதிசயங்கள் பார்வையாளர்களின் குணாதியத்துடன் ஒத்துப்போவதாலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இன்றைக்கு தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இடத்தை எட்டியுள்ளனர். குறிப்பாக ஹரீஸ் கல்யான், கவின், தர்ஷன் உள்ளிட்டோரைக் குறிப்பிடலாம்.

பூர்ணிமா ரவி: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பூர்ணிமா ரவி, யூட்டூப் சேனல் நடத்தி, அதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். அந்த காலகட்டத்தில் பிக்பாஸில் இருந்து அழைப்பு வந்ததும், பூர்ணிமா ரவி பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். கடைசி வாரத்திற்கு முந்தைய வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட ரூபாய் 16 லட்சம் மதிப்புகொண்ட பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு தானாகவே வீட்டில் இருந்து வெளியேறினார்.

Poornima Ravi Bigg Boss Poornima

அதிருப்தி: இது சக போட்டியாளர்களுக்கு தொடக்கத்தில் ஏமாற்றம் அளித்தாலும், அதன் பின்னர்தான், பூர்ணிமாவின் செயல் சரியானதுதான் என பாராட்டினர். அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கைகள் மக்கள் மத்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெறித்தனமான ரசிகர்கள் மத்தியிலும் பெறும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

படங்கள்: பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பூர்ணிமா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் நயன்தாரா நடிப்பில் உருவான அன்னப்பூரணி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல், செவப்பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

Poornima Ravi Bigg Boss Poornima

புது வீடியோ: இந்நிலையில் பூர்ணிமா ரவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அண்மையில் தான் நடத்திய போட்டோசூட்டின் போது எடுத்த வீடியோ இளையராஜாவின் இசையில் உருவான பனிவிழும் மலர்வனம் பாடலைச் சேர்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பூர்ணிமா ரவி சேலை கட்டிக்கொண்டு ஹோம்லியாகவும், கொஞ்சம் கிளாமராகவும் இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை தட்டி விட்டு வருகின்றனர். சிலர் பூர்ணிமாவை தமிழ் அழகி என்றும், டஸ்கி ஸ்கின் குயின் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X