Bigg Boss 7: முதல் வாரமே இரண்டு எலிமினேஷனா? குண்டை தூக்கிப்போட்ட கமல்..கப்சிப்பான போட்டியாளர்கள்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரமான நிலையில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.

bigg boss tamil season 7 october 8th promo 2 and fans reactions

பிக் பாஸ் சீசன்7: இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில், முதல்வாரம் எலிமினேஷன் இல்லை கவலைபடாதீங்க பிரதீப் என்று சொல்லும் கமல் சார். இரண்டு வீடு இருக்கே இரண்டு எலிமினேஷன் இருக்குமோ என ஒரு வெடியை தூக்கி போடுகிறார் கமல். அதைக்கேட்ட போட்டியாளர்கள் அப்படியே ஆடி போய் அமர்ந்து இருக்கிறார்கள்.

மூன்றாவது ப்ரோமோ: இதையடுத்து, கமல், இந்த வாரம் யார் வெளியேற போறாங்கனு நினைக்கிறீங்க என போட்டியாளரிடம் கேட்கிறார், அப்போது எழுத்தாளர் பவா, பிரதீப் தான் வெளியே போவாரு என்று சொல்ல அதைகேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் அனைவரும், பவா சார் தான் என சொல்கிறார்கள். அப்போது கமல் பவாவை பார்த்து உங்கள் கருத்து என்ன என கேட்கிறார். அதுக்கு பவா நான் வெளியே போக கொஞ்ச நாள் ஆகும் என நினைக்கிறேன் என்றார். இதனால், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்குமா என்கிற எண்ணம் எழுந்துள்ளது.

வன்முறை பேச்சு: காலையில் முதல் ப்ரோமோ வெளியானது. அதில், நடிகர் கமல்ஹாசன், விஜய் நீங்க முழங்கையை வச்சி இப்படி இடிச்சா மூக்கு, வாய் உடைந்துவிடும். எனக்கு வெளியே எல்லாம் ஆள் இருக்கு. அப்படின்னு சொன்னீங்க என்று சொல்ல, அதற்கு விஜய் சார் அப்படியெல்லாம் இல்லை என்று சமாளிக்க, அதற்கு கமல்ஹாசன் எங்ககிட்ட குறும்படம் இருக்கு என்று சொன்னதும் விஜய் ஆமாம் என்பது தலையை அசைத்தார்.

மஞ்சள் ஸ்ட்ரைக் கார்ட்: இது வன்முறை பேச்சுக்கான என்னுடைய கண்டனம் என்று மஞ்சள் ஸ்ட்ரைக் கார்ட் ஒன்றை காட்டுகிறார். இது மீண்டும் மூன்று முறை நீங்க வாங்கிட்டீங்கன்னா சந்தோஷமா என்கூட வந்து பேசிட்டு நீங்க கிளம்பி போய்கிட்டே இருக்கலாம் என்று எச்சரிக்கை செய்திருந்தார். இதனால், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X