Bigg Boss 7: ஜெயிலுக்கு சென்ற 2 போட்டியாளர்கள்.. தேம்பி அழும் பெண் பிரபலம்.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தற்போது ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது.

இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

bigg boss tamil season 7 october 9th promo 3 and fans reactions

விஜய் வர்மாவை எச்சரித்த கமல்: ஜோவிகா மற்றும் விசித்ரா விஷயத்தில் கமல் இரண்டு பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து நைசாக நழுவிவிட்டார். ஆனால், விஜய் வர்மா, பிரதீப்பை மிரட்டும் தொனியில் பேசியதை வன்மையாக கண்டித்த கமல், விஜய் வர்மாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக Yellow Card ஒன்றை கொடுத்தார். மேலும், இன்னும் இரண்டு Yellow Card வழங்கும் பட்சத்தில் விஜய் வர்மா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் எச்சரித்தார் கமல்.

அனன்யா வெளியேறினார்: இது ஒருபுறமிருக்க கடந்த வாரம் நடைபெற்ற முதல் வார நாமினேஷனில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் ஜோவிகா, இடம்பெற்றது. இதில் பவா தான் வெளியேறுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் அனன்யா வெளியேறி இருந்தார்.

மூன்றாது ப்ரோமோ: இதையடுத்து, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இந்த பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்டுகள் பிறப்பிக்கப்படவுள்ளன எனக் கூறுகிறார். மக்களை எண்டர்டெய்ன்மென்ட் பண்ணுறதுதான் உங்களுடைய முதல் கடமையாக இருக்க வேண்டும் என எல்லாருக்கும் சொல்லப்பட்டது.

ஜெயிலுக்கு செல்லும் இரண்டு பேர்: இந்த அடிப்படையில் போன வாரம் அனைவரையும் அப்ஸர்வ் செய்தேன் அதில், போரிங் பர்பாமர் என்று அரெஸ்ட் வாரண்ட் கொடுக்கப்பட்ட நபர்கள் அக்ஷயா, மற்றும் வினுஷா, இவர்கள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதைத் கேட்ட அக்ஷயா கேமிரா முன் நின்று தேம்பி தேம்பி அழுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X