இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு? அடுத்த சீசன் வந்தாச்சு.. இப்ப வந்து வன்மத்தைக் கொட்டும் மாயா - அர்ச்சனா
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 கடந்த ஆண்டு முடிந்து, அடுத்த சீசன் தொடங்கி, அதுவும் 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டு உள்ளது. இப்படியான நிலையில், கடந்த சீசன் ஃபைனலிஸ்ட்டான மாயாவுக்கும் கடந்த சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கும் இடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இவங்க வன்மம் இன்னுமா தீரல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த சீசனில், பெரும்பான்மையான ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாளர்களில் மாயாவும் அர்ச்சனாவும் இருந்தார்கள். இருவரும் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் எங்கெல்லாம் ஆட்டத்தை சுவாரஸ்யப் படுத்தமுடியுமோ அங்கெல்லாம், ஆட்டத்தை சுவாரஸ்யப்படுத்தினர்.

இவர்கள் இருவருமே, சீசன் 7ன் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அப்படி இருக்கும்போது, இவர்களுக்கு இடையில் வீட்டுக்குள் பலமுறை பிரச்னைகள் ஏற்பட்டது. இவர்களுக்கு இடையேயான பிரச்னைகள் வீட்டுக்கு வெளியே இருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் மத்தியிலும் வார்த்தைப்போராக வெடித்தது. இப்படியான நிலையில் இந்த சீசனில் உள்ள போட்டியாளர் ஒருவரின் ரசிகர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதாக அர்ச்சனா ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மாயா, அர்ச்சனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். அதில், கடந்த சீசனில் நாங்களும் இதுபோன்ற ஒரு போட்டியாளரின் பி.ஆர். குழுவினால் பெரும் மிரட்டல்களை சந்தித்தோம் எனத் தெரிவித்தார்.

அர்ச்சனா: இதில் மாயா தெரிவித்த, இன்னொரு போட்டியாளர் அர்ச்சனாவின் பி.ஆர் குழுதான் எனவும், அதைத்தான் மாயா மறைமுகமாக கூறியுள்ளார் என பேசிவருகின்றனர். இப்படியான நிலையில் மாயாவின் இந்த பதிவுக்கு, பதில் அளித்த அர்ச்சனா, " மாயா நான் உங்களின் எக்ஸ் பதிவைப் பார்த்தேன். உங்களுக்கும் மற்றவர்களும் நடந்ததை நினைத்து நான் அனுதாபம் கொள்கின்றேன். உங்களின் பதிவில் கடந்த சீசனில் யாரோ ஒருவரின் பி.ஆர். ஸ்டண்ட் என் குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை.

தவிர்க்கவும்: நமது இருவரும் இந்த இடத்திற்கு பெரும் உழைப்பைச் சிந்தித்தான் வந்துள்ளோம். ஆனாலும் இந்த நேரத்தில் சந்தர்ப்பவாதியாக நடந்து கொள்வதைக் காட்டிலும், நீங்கள் எனக்கு பக்கபலமாக இருந்து இருக்கலாம். அதேநேரத்தில், செடி வாடிப்போச்சுனா சொல்லு வந்து தண்ணி ஊத்தீட்டுப்போறான் என்பதுபோன்ற பதிவுகளை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

மாயா பதில்: இவரது இந்தப் பதிவுக்கு மாயா அளித்த பதில் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, " ப்ரோ, நீங்கள் குறிப்பிட்டுள்ள வாக்கியமான உங்களுக்கு நடக்கும்போது மட்டும் தவறாகத் தோன்றும் என்பது சூப்பராக உள்ளது. என்னையும் எனது இரண்டு நண்பர்களையும் யாரென்றே தெரியாதவர்கள் போன் செய்து, செடி வாடிப்போச்சுனா தண்ணி ஊத்துங்க எனக் கூறினார்கள். அப்படியென்றால் செடி வாடும்போது தண்ணீர் ஊற்றவேண்டும்தானே? அல்லது அது எக்ஸ் தளத்திற்கு மட்டும்தானா? அதைத் தெளிவு படுத்திவிட்டால், நாங்கள் அதைப் பின்பற்றிக் கொள்வோம். மேலும் நீங்கள் எனது பதிவை தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கின்றேன். உங்களுக்கு நடந்த அந்த விஷயத்தில் நான் உங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றேன். எனது அனுபவத்தையும் பகிர நினைத்தேன் அவ்வளவுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் வார்த்தைச் சண்டையைப் பார்த்த ரசிகர்கள் இதற்கு ஒரு எண்ட் இல்லையா சார் எனக் கேட்டு வருகின்றார்கள்.



Click it and Unblock the Notifications











