BB8: ஹேப்பியா போன ஃபேமிலி வீக்.. எண்டுல வந்து எலிமினேஷன் வச்ச VJS.. யாரு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு உள்ளது. வீட்டில் தற்போது முத்துக்குமரன், மஞ்சரி, தீபக், ஜாக்குலின், பவித்ரா, அருண், விஷால், ஜெஃப்ரி, அன்ஷிதா, சௌந்தர்யா, ராணவ் மற்றும் ரயான் என மொத்தம் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இந்த 12 போட்டியாளர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் சென்று, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். இந்நிலையில், வார இறுதி நாட்களின் முதல் நாளான இன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சீசன் தொடக்கத்தில் மக்கள் மத்தியில் பெரிய கவனத்தினை ஈர்க்கவில்லை என்றாலும், சீசன் முடிய இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கு, மக்களுக்கு குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த வாரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றதால் வீடு முழுவதும் அன்பு மழை பொழிந்தது எனலாம்.

குடும்பத்தினர் சென்று அனைத்து போட்டியாளர்களையும் ஊக்கப்படுத்தினாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைக் கேட்டு ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியாளரும் இந்த வாரத்தில் மிகவும் அழகாகத் தெரிந்தனர். ஆனால் போட்டி முடிவடைய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளது. இதனால், போட்டியில் இருந்து மொத்தம் 7 போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியேற்றினால்தான், டாப் 5 போட்டியாளர்களை இந்த சீசனில் தேர்வு செய்ய முடியும்.

அன்ஷிதா: இந்த டாப் 5 போட்டியாளர்களில் ஒருவர், டிக்கெட் டூ ஃபினாலே மூலம் நேரடியாகச் செல்வார். என்பதால் ஆட்டம் நினைத்ததை விடவும் வரும் நாட்களில் சூடு பிடிக்கவுள்ளது. அப்படியான நிலையில் இந்த வார இறுதி நாட்களில் முதல் நாளான இன்று அதாவது சனிகிழமை டிசம்பர் 28ஆம் தேதி எபிசோடில் போட்டியாளர் அன்ஷிதா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தகவல் அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

எலிமினேட்: இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில், ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா, விஷால், ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா நாமினேட் செய்யப்பட்டனர். இதில் இருந்து குறைந்த வாக்குகளைப் பெற்ற அன்ஷிதா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் நாளை ஒரு எலிமினேஷன் இருக்கும் என்பதால், அது யார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











