Bigg Boss 8: போட்ட உழைப்பு எல்லாம் வீண்.. TTF ஜெயிச்சு என்ன பயன்? ரயானோடு வெளியேறிய அந்த நபர் யார்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளையோடு முடிவுக்கு வருகின்றது. நேரடிப் போட்டியாளர்கள், வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டார்கள். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு முயற்சிகளைச் செலுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியான நிலையில் இந்த வாரத்தில் வீட்டிற்குள் மொத்தம் 5 போட்டியாளர்கள் உள்ளார்கள். இதில் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்குள் மொத்தம் 6 போட்டியாளர்கள் இருந்தார்கள். அதாவது, முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, ரயான், விஷால் மற்றும் பவித்ரா என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருந்தார்கள். இதில் வாரத்தின் இடைப்பட்ட நாளில், பணப்பெட்டி டாஸ்க்கில், ஜாக்குலின் தோல்வியைச் சந்தித்ததால், அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் இப்போது வீட்டிற்குள் மொத்தம் 5 போட்டியாளர்கள் உள்ளார்கள்.

டைட்டிலை வெல்லும் போட்டியாளருக்கு ரூபாய் 50 லட்சம் என்பது பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும். இதில் ஏற்கனவே பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டியாளர்கள் ரூபாய் 9 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றிவிட்டதால், டைட்டிலை வெல்லும் நபருக்கு, ரூபாய் 40 லட்சத்து 50 அயிரம் பரிசுத் தொகை, வழங்கப்படும்.

டாப் 5: இப்படியான நிலையில் 105வது நாளுக்கான சூட்டிங் இன்றைக்கு நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்ற ரயானும் வெளியேற்றப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள், இந்த சீசனில், கடைசியாக உள்ளே சென்ற போட்டியாளர் ரயான். தனது அட்டகாசமான ஆட்டம், டாஸ்க்கில் வெறித்தனமாக செயல்படுவது என அவரது செயல்பாடுகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதனால் அவரை டாஸ்க் பீஸ்ட் என அழைத்தார்கள். டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் வெறித்தனமாக விளையாடி, இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

ரயான் - பவித்ரா: ஆனால் ரயானால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. ரயான் வீட்டில் இருந்து மூன்றாவது ரன்னர்-அப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக நான்காவது ரன்னர் - அப்பாக பவித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரயான் ரசிகர்கள், டிக்கெட் டூ ஃபினாலே வென்றும் டைட்டிலை வெல்ல முடியவில்லையே என வேதனையோடு பதிவிட்டு வருகின்றார்கள். அதேபோல் டைட்டிலை முத்துக்குமரன் வென்றுள்ளார், என்றும், இரண்டாவது இடத்தினை விஷால் வென்றுள்ளார் எனவும் மூன்றாவது இடத்தினை, சௌந்தர்யா வென்றுள்ளார் என கூறப்படுகின்றது.

பணப்பெட்டி: இருவருமே பணப்பெட்டி டாஸ்க்கில் தலா இரண்டு லட்சம் ரூபாயை எடுத்திருந்தார்கள். இதனை இவர்கள் எடுத்துச் செல்வார்கள். இது மட்டும் இல்லாமல், இவர்கள் இவ்வளவு நாட்கள் இருந்ததற்கு சம்பளமும் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











