Bigg Boss 8 Tamil: ஓவரா வாய் பேசிய ரியா.. ஓரம் கட்டிய ரசிகர்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷனாமே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். எப்போதுமே ஒரு சீசனுக்கு அடுத்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். அதேபோல் இந்த சீசனுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வரவேற்பு புஸ்வானமாகிவிட்டது. சுவாரஸ்யமே இல்லாமல் நகரும் ஒவ்வொரு நாள் எப்பிசோடையும் பார்ப்பதற்குள் ரசிகர்களுக்கு போதும்போதும் என ஆகிவிடுகின்றது. இப்படியான நிலையில், பிக்பாஸ் சீசன் 8இன் 6வது வாரத்தில், வைல்ட் கார்டு எண்ட்ரியில் போட்டியாளராக உள்ளே சென்ற ரியா எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை, ஃபேட்மேன் ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என மூன்றுபேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே வீட்டில், முத்துக்குமரன், வி.ஜே. விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாஞ்சனா மற்றும் ஆனந்தி என 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில், புதிதாக ரயான், ரியா தியாகரஜன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட், ஷிவ் குமார் மற்றும் ராணவ் என 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே சென்றுள்ளார்கள்.

riya bigg boss tamil season 8 vijay sethupathi 8

வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே 6 பேர் சென்ற போதும்கூட ஆட்டத்தில் சுவாரஸ்யம் துளியும் கூடவில்லை என்பதை விஜய் சேதுபதியே ஒப்புக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் என்றாலே, அது வீக் எண்டில் விஜய் சேதுபதி வருவதுதான். கடந்த வாரத்தில் தீபாவளி வாரம் எனக் கூறி யாரையும் எலிமினேட் செய்யவில்லை. மேலும் 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே சென்றார்கள்.

நாமினேஷன்: இப்படியான நிலையில், இந்த வாரம் எலிமினேஷனுக்கு ஏற்கன்வே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள். மேலும் ஓபன் நாமினேஷன் நடைபெற்றதால், போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாகவே நாமினேட் செய்தார்கள். அந்தவகையில், இந்த வார நாமினேஷனுக்கு மொத்தம் 13 போட்டியாளர்கள் ஆளானார்கள். சௌந்தர்யா, ரானவ், ஜெஃப்ரி, ஜாக்குலின், தீபக், ரஞ்சித், சத்யா, தர்ஷிகா, சாச்சனா, வர்ஷினி, மஞ்சரி, ரியா, சிவகுமார் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள்.

riya bigg boss tamil season 8 vijay sethupathi 8

ரியா: இதில் வாக்கெடுப்பில் சௌந்தர்யா அதிக வாக்குகள் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது. அதேபோல் கடைசி இடத்தில் வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே சென்ற போட்டியாளர் ரியா உள்ளதாகவும், அதனால் அவர்தான் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் பல பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்தது, போட்டியாளர் வர்ஷினி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது.

2 பேர் எவிக்‌ஷன்: கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 8இன் மிகவும் சிறப்பான போட்டியாளர் சுனிதா வெளியேற்றப்பட்டார். 6வது வாரத்தில் போட்டியாளார் ரியா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ள நிலையில், இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X