Bigg Boss: எல்லாம் டெக்னாலஜி! முத்துவை டப்பானு சொன்ன அருண்.. குறும்படம் போட்டு அடிக்கும் இணையவாசிகள்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகிக் கொண்டே உள்ளது. தொடக்கத்தில் விஜய் சேதுபதிக்காக மட்டும் விக் எண்டில் அட்டனஸ் போட்டுக் கொண்டு இருந்த ரசிகர்கள் இப்போது வீக் டேஸையும் ரசிக்க ஆரம்பிக்கத்தொடங்கிவிட்டனர். இதற்கு காரணம் பிக் பாஸ் வீடு கடந்த இரண்டு வாரங்களாக முழுக்க முழுக்க கதாபாத்திரங்களை மைய்யபடுத்தியதாக இருப்பதால்தான் எனவும் கூறுகின்றனர். அதாவது, 6வது வாரத்தில் ஸ்கூல் கான்செப்ட் 7வது வாரத்தில் மன்னர்களின் ராஜ்ஜியங்கள் கான்செப்ட் என வீடே கண்டெண்ட் கண்டெய்னராக மாறிவிட்டது.

இப்படியான நிலையில் போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டியும் அதிகரித்துள்ளது. போட்டியாளர்கள் வீட்டுக்குள் தாங்கள் இருக்க நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக எதையாவதைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இதில் 48வது நாளான நேற்றைய எபிசோடில் அதாவது நவம்பர் 23ஆம் தேதி எபிசோடில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதில் குறிப்பாக, போட்டியாளர் அருண், போட்டியாளர் முத்துக் குமரனை டப்பா என சக போட்டியாளர்களிடம் கூறும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

muthukumaran bigg boss tamil 8 arun

அதாவது நேற்றைய எபிசோடில், விஜய் சேதுபதி போட்டியாளர் சாச்சனாவிடம் சில கேள்விகள் கேட்கும்போது சாச்சனா பதில் சொல்லும்போது அழுதுவிட்டார். அவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்ததால், சக பெண் போட்டியாளர்கள், சாச்சனாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது அழுது கொண்டே, நான் முத்து அண்ணாகிட்ட போகனும் என சாச்சனா கூற, உடனே சக பெண் போட்டியாளர்கள், முத்துக்குமரனை அழைத்தனர்.

சாச்சனா - முத்து: இதனால், சாச்சனாவிடம் வந்த முத்துக்குமரன், சாச்சனாவை அழவேண்டாம் எனக் கூறி ஆறுதல்படுத்தினார். மேலும், மேலும் சாச்சனாவைக் கட்டிப்பிடித்தும் ஆறுதல் கூறினார். ஏற்கனவே சாச்சனாவும் முத்துவும் அண்ணன் தங்கையாக பழகி வருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், சாச்சனா தான் உடைந்து அழுத நேரத்தில், முத்து அண்ணாகிட்ட போறேன் எனக் கூறியது ரசிகர்களையே நெகிழ வைத்துவிட்டது.

muthukumaran bigg boss tamil 8 arun

அருண்: இப்படியான நிலையில், சாச்சனாதான் முத்துவிடம் செல்வதாகக் கூறினார் எனத் தெரியாத அருண் முத்துவை, சக போட்டியாளர்களிடம் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். முத்து குறித்து அருண் பேசுகையில், " முத்து தனது நண்பர் என்பதால் டாஸ்க் கொடுத்தேன்னு மஞ்சரி சொன்னதை நான் விஜய் சேதுபதி சாரிடம் சொன்னேன். உடனே முத்து இல்லை எனக் கூறினார். மஞ்சரி நான் அப்படிதான் சொன்னேன்னு சொன்னதும் முத்து சாரி சொல்றான். டப்பா அடிக்கிறான்சார். மரண டப்பா அடிக்கிறான்.

muthukumaran bigg boss tamil 8 arun

மரண டப்பா: சரியான டப்பா சார் முத்து. ஆனால் மூஞ்சி மட்டும் பாருங்க நியாமானவன் மாதிரி வெச்சுப் பேசுவான். ஒருநாள் இவன் மாட்டுவான் சார். வெளியில பாக்கறவங்க இவனை கண்டுபுடுச்சுடுவாங்க. இவன் பேசுற பேச்சு, அடிக்கிற டப்பா, தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள என்ன செய்யமுடியுமோ செய்யறான். இப்போ சாச்சனாகிட்ட போயி, சாச்சனாவை கட்டிப்பிடித்து கன்சோல் செய்துகிட்டு இருக்கான். சாச்சனாவுக்கும் ராணவ்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை. சாச்சனா தனது தப்பை உணர்ந்துட்டாங்க. ஆனால் இவன் எதுக்கு அவங்களுக்கு இடையில போகனும்? இவன் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான். இவன் சரியான டபுக்கு டப்பா" எனக் கூறினார்.

வீடியோ: சாச்சனா தான் முத்துவைக் கூப்பிட்டார் எனத் தெரியாமல் அருண் முத்து குறித்து பேசியிருப்பதால், பிக் பாஸ் ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள், முத்துவின் ரசிகர்கள் என பலரும் அருணை இணையத்தில் போட்டு கிழிகிழியெனக் கிழிக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X