BB8: பிக்பாஸ் உடன் சௌந்தர்யா செம ரொமான்ஸ்.. மணி ரத்னம் படம் ரேஞ்சுக்கு இருக்கேப்பா!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 மிகவும் பரபரப்பான இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்ற சீசன்களில் இல்லாத அளவுக்கு, இந்த 8வது சீசனில் கடைசி 8 போட்டியாளர்களுக்கு சவாலை அதிகரிக்கும் வகையில், ஏற்கனவே வெளியேறிய 8 போட்டியாளர்களை மீண்டும் களமிறக்கி, ஆட்டத்தை சூடு பிடிக்கச் செய்துள்ளது பிக் பாஸ் டீம். இதற்கிடையில் போட்டியாளர் சௌந்தர்யா மனமுடைந்து அழுது கொண்டு இருக்க, உடனே அவரை அழைத்து பேசியுள்ளார் பிக் பாஸ். இதனைப் பார்த்த ரசிகர்கள் செம ரொமான்டிக்கான சீன் போல இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

bigg boss tamil bb8 soundarya

பிக் பாஸ் சீசன் 8 தொடங்கும்போதும் ஆரவாரமில்லாமல் சென்றாலும், இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 10 நாட்களில் இந்த சீசன் முடியவுள்ள நிலையில், போட்டியாளர்களில் 8 பேர் டாப் 8 போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, ரயான், அருண், சௌந்தர்யா, தீபக், ஜாக்குலின், பவித்ரா, விஷால் மற்றும் முத்துக்குமரன் என 8 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ரயான், டிக்கெட் டூ ஃபினாலேவை வென்றதால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட போட்டியாளராக உள்ளார்.

bigg boss tamil bb8 soundarya

இப்படியான நிலையில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து, 8 போட்டியாளர்களை மீண்டும் களத்தில் இறக்கிவிட்டு, ஆட்டத்தை மேலும் சுவாரஸ்மாக்கியுள்ளார்கள். அதில், சுனிதா, அர்னவ், ஃபேட்மேன் ரவி, சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா, வர்ஷினி மற்றும் ஷிவ்குமார் என மொத்தம் 8 போட்டியாளர்கள் களமிறக்கிவிடப்பட்டார்கள். இவர்கள் களமிறங்கிய பின்னர், சில போட்டியாளர்களின் ஆட்டம் ஆட்டத்தை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது என்றுதான் கூறவேண்டும்.

bigg boss tamil bb8 soundarya

சௌந்தர்யா: இப்படியான நிலையில் போட்டியாளர்கள் அதிகம் சௌந்தர்யாவை அட்டாக் செய்வதால், சௌந்தர்யா மிகவும் மனமுடைந்து அழுது கொண்டு இருந்தார். தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யாவை அழைத்த பிக் பாஸ் அவரை சமாதானப்படுத்தியது மட்டும் இல்லாமல், அவருக்கு ஊக்கம் அளித்து, உற்சாகமாக விளையாடுமாறு அறிவுரை கூறி அனுப்பினார். அழுது கொண்டு இருந்த சௌந்தர்யாவை, கன்ஃபெஷன் அறைக்கு வரச்சொன்ன பிக் பாஸ் அவரை, சமாதானப்படுத்தினார்.

bigg boss tamil bb8 soundarya

ஐ லவ் யூ: அழுது கொண்டு இருந்த சௌந்தர்யா, " நான் இப்போது அழுது கொண்டு இருக்கின்றேன். பார்ப்பதற்கு கொஞ்சம் அசிங்கமாக இருப்பேன் எனக் கூறினார். உடனே பிக் பாஸ், நீங்க அழகா இருக்கீங்க சௌந்தர்யா. உங்களைக் கூப்பிட்டு பொய் சொல்லவேண்டும் என எனக்கு என்ன அவசியம் இருக்கு? நம்புங்க என பிக் பாஸ் கூற, உடனே சௌந்தர்யா நம்பிக்கைதான் வாழ்க்கை எனக் கூறினார். உடனே பிக் பாஸ், ' ..ம்ம்ம் இப்ப சொல்லுங்க.. இவ்வளவு நேரம் எங்க போச்சு? எனக் கேட்டார். அதற்கு சௌந்தர்யா, கொஞ்சம் வெளியே போயிருந்தது பிக்பாஸ், இப்போ வந்துடுச்சு, எனக் கூற, பிக்பஸ் உடனே குட் கேர்ள் எனக் கூறினார்.

bigg boss tamil bb8 soundarya

ரொமான்ஸ்: அதன் பின்னர் பிக்பாஸ், இன்னொரு விஷயத்தை நீங்க ஆர்கானிக்கா சம்பாதித்து உள்ளீர்கள், அதைச் சொல்லவா எனக் கேட்டார். உடனே சௌந்தர்யா என்னது? எனக் கேட்க, ஐ லவ் யூ எனக் கூறினார் பிக் பாஸ். அதுவரை சோகமாக இருந்த சௌந்தர்யா, உடனே சிரித்து, பிக் பாஸ்க்கு லவ் யூ டூ பிக் பாஸ் எனக் கூறினார். இந்தக் காட்சிகளை இணையத்தில் பகிரும் இணையவாசிகள், பிக் பாஸுக்கும் சௌந்தர்யாவுக்கும் தனி லவ் டிராக் ஓடுது டோய் என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகின்றார்கள். மேலும் சிலர், பிக் பாஸ்க்கும் சௌந்தயாவுக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது, இவர்களுக்கு இடையில் நடந்தது செம ரொமான்ஸ் சீன். இது மணி ரத்னம் படம் போல செம சூப்பராக இருக்கு எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

bigg boss tamil bb8 soundarya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X