பிக் பாஸ் 8 : மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்சேதுபதி.. வீடே பிரிஞ்சு இருக்கே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாக கமல் தொகுத்து வழங்கிய நிலையில் இன்று பிக் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
இன்று மாலை சரியாக ஆறு மணிக்கு எஞ்சாமி பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாடகர்கள் அறிவு பாடல் மற்றும் நடனத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தீப்பொறிக்கு இடையே விஜய் சேதுபதி மாஸ் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து, தனக்கே உரிய பாணியில் பேசிய விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்க போகிறார். என்ன செய்ய போகிறார் என்கிறார் என்கிற கேள்வி மக்கள் மனதில் இருந்தது.

விஜய் சேதுபதி பேச்சு: இதற்காக நானும், ரூம் எல்லாம் போட்டு பிளான் போட்டு பார்த்தேன். ஆனால், எதுவும் வொர்க்ட் ஆகவில்லை கடைசியில் சரிவிடுப்பா நல்லாம் நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இதில் ஆடப்போவது நான் இல்ல, நீங்க நான் இங்கே இருந்து பார்த்து தீர்ப்பு சொல்லுவேன். தீர்ப்பு சொல்லும் போது, ராஜாவாக இருக்கப்போகிறேனே, இல்லை அரக்கனாக இருக்கப்போகிறேனா என்பது தெரியாது. நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டால், நாம பார்த்து செய்துக்கலாம்.
தீர்ப்பு கொடுக்கும் போது எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும். தீர்ப்பு கொடுக்கும் போது நான் இப்படிப்பட்ட ஒருவனாக இருப்பேன் என்று எனக்கு தெரியாது. எதாவது தப்பாயிருச்சுன்னா பாத்து பேசிக்கொள்ளாம்.என்னை கேட்டா உங்க மேல பழி போடுகிறேன். ஓட்டு போட்டது அவங்கதான் என்று சொல்லிவிடுகிறேன். உங்கள கேட்டால், தீர்ப்பு கொடுத்தது அவர்தான்,அவரை கேளுங்கன்னு சொல்லிடுங்க என்று வழக்கமான விஜய்சேதுபதி தனது பாணியில் பேசினார்.
சுற்றிப்பார்த்த விஜய்சேதுபதி: இதையடுத்து, பிக் பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த விஜய் சேதுபதி, இந்த வீட்டிற் வந்துவிட்டால், நான் பெரிய ஆள், நீ பெரிய ஆள் என்ற எண்ணம் வரக்கூடாது அனைவரும் இந்த வீட்டில் ஒன்று தான் என்றார். சமையல் அறை, பேட் ரூம், லிவ்விங் ஏரியா என வழக்கம் போல பிக் பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. உள்ளே வந்த விஜய் சேதுபதியை பிக் பாஸ் அவரின் முழுப்பெயரை சொல்லி அழைத்த, என் முழுபெயரை சொல்லி அழைப்பதற்கள் நிகழ்ச்சியே முடிந்துவிடும். என்னை சேது என்றே அழைத்தால் போதும் என்றார்.


Click it and Unblock the Notifications











