Bigg Boss Tamil: போன சீசன்ல கண்ணம்மா.. இந்த சீசன்ல பாரதி! வாய்ப்பு கிடைக்கலனு புலம்பிய அருண் பிரசாத்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று முதல் அதாவது அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இது 8வது சீசன் என்பதால் இந்த சீசனை மிகவும் பிரமாண்டமாகவும் வித்தியாசமாகவும் நடத்த விஜய் டிவி திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலவுதாக அறிவித்தார். இதனால் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்த சீசனின் 12வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத். அவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர். இந்த ஒரு சீரியலிலேயே பெரும்பாலான ரசிகர்களிடம் போய்ச் சேர்ந்தர். மேலும் கடந்த சீசனின் வின்னரான அர்ச்சனாவின் காதலர் எனவும் இணையதளத்தில் பேசப்படுகின்றது. இவரது சொந்த ஊர் சேலம். சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் தேடிப்படிக்கும் விஷுவல் கம்யுனிக்கேஷன் படித்துள்ளார். இதனால் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்ற இவர, நிகழ் காலம், ஏனோ வானிலை மாறுதே, ஏதோ மாயம் செய்தாய், பகல் கனவு, கள்ளன், அகப்பிழை உள்ளிட்ட குறும்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தனது தொடர் முயற்சியால் மேயாத மான் படத்தில் நடித்தார். இதில் கவனம் பெறும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் சின்னத்திரை பிரபலங்களில் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் என கூறி பலரும் ரூமரைக் கிளப்ப, அர்ச்சனா அதனை மறுத்தார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். விஜய் சேதுபதியிடம் அவர் பேசுகையில் திறமை இருந்தாலும் அதனை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைப்பதில்லை சார் எனப் பேசினார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இவரிடம் விஜய் சேதுபதி மேயாத மான் படம் குறித்து பேசினார்.


Click it and Unblock the Notifications











