பெண்கள் பாத்ரூமில் பயத்துடன் நுழைந்த முத்து.. பிரதீப் ஆண்டனி மாதிரி இவரையும் செஞ்சிடாதீங்க கேர்ள்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தொடங்கிவிட்டாலே, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவர் இப்படிச் செய்தார், அதனை இவர் இப்படிப் புரிந்து கொண்டார், இதனால் இப்படியொரு பிரச்னை உருவாகி அதனால் நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்ற பேச்சு பிக்பாஸ் வந்துவிட்டாலே ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது. அதுவும் பிக் பாஸின் தீவிர ரசிகர்கள் இது அந்த சீசனில் நடந்தது போல உள்ளதே என தற்போது நடைபெறும் சீசனுடன் ஒப்பிட்டிக்கொண்டு இருப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம்தான் தற்போது நடைபெற்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இந்த சீசனில் சினிமா விமர்சகர், பேச்சாளர் முத்துக்குமரன் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் பாத்ரூமுக்குள் நுழையும்போது யாராவது இருக்கின்றீர்களா எனக் கேட்டுக் கொண்டே நுழைகின்றார். மேலும் ஒரு பாத்ரூமைத் மெதுவாகத் திறந்து கொண்டு, யாராவது இருக்கின்றீர்களா எனக் கேள்வி கேட்கின்றார். பாத்ரூமிற்குள் இருந்து பெண் போட்டியாளரின் குரல் கேட்டதும், பாத்ரூமினை மூடிவிடுகின்றார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதேபோல், கேமிரா முன் வந்து நின்று கொண்ட முத்துக்குமரன், தான் வெளியில் இருந்தபோது பெண்களுக்கான அநீதி ஏற்பட்டபோதெல்லாம், தான் எவ்வாறு குரல் கொடுத்தேன் என்பது குறித்து உங்களுக்கே தெரியும் என ரசிகர்களை நோக்கி பேசுகின்றார்.

bigg boss tamil season 8 8

இதுமட்டும் இல்லாமல், ஆண்கள் அணியினருடன் பேசும்போது, அடக்குமுறைக்கு எதிரான குரல் என்பது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடுவது தவறு. பெண்களின் சுதந்திரம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரமும் அவரவர் கையில்தான் உள்ளது. எனவே ஃபெமினிஷம் என்ற ஒன்றே தேவையில்லை எனப் பேசிக்கொண்டு உள்ளார்.

பிரதீப் ஆண்டனி: இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், முத்துக்குமாரின் நடவடிக்கைகள் கடந்த சீசனில் பிரதீப் ஆண்டணியை நினைவு படுத்துவதாக கூறி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதீப் ஆண்டனி பெண்கள் பாத்ரூமினைத் திறந்து பார்த்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். அதேபோல் சக போட்டியாளரின் அரைஞாண் கயிறு தொடர்பாக அவர் கமெண்ட் செய்தார் எனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் ஆதரவு தெரிவித்தனர்.

bigg boss tamil season 8 8

பாத்ரூம்: இந்த சீசனில் முத்துகுமரன் அதுபோல் ஆகிவிடுவரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள் அவர் பாத்ரூமிற்குள் யாராவது இருக்கின்றீர்களா எனக் கேட்டுக்கொண்டுதான் கதவைத் திறக்கின்றார். முதலில் ஒரு பாத்ரூமில் இருந்து குரல் கேட்டதால் அதனை அவர் தொடாமல் வந்துவிட்டார். அருகில் இருந்த பாத்ரூமில் இருந்து தொடக்கத்தில் சத்தம் எதுவும் கேட்காததால்தான் அவர் அதனைத் திறக்க முயற்சி செய்துள்ளார்.

சதி: மேலும் அதனைத் திறக்கும்போதும்கூட யாராவது இருக்கின்றீர்களா எனக் கேட்டுக் கொண்டு மொதுவாகவே திறக்கின்றார். அப்போது அங்கிருந்து சத்தம் வந்ததால், அந்த பாத்ரூம் கதவினை மூடிவிட்டார். பிரதீப் ஆண்டனியே சக போட்டியாளார்களின் சதியால்தான் வெளியேற்றப்பட்டார், அந்த சதிகளுக்கு எல்லாம் முத்துக்குமரன் ஆளாக மாட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

bigg boss tamil season 8 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X