என்ன மாதிரி ஆளுங்க முன்னேறக்கூடாதா? எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணல.. வீடியோவில் அழும் பிக் பாஸ் ரியா!

சென்னை: பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற ரியா தியாகராஜன்,14 நாட்களிலேயே குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால், மன வேதனையில் இருக்கும் ரியா,என்ன மாதிரி ஆளுங்க முன்னேறக்கூடாதா என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளரான ரியா தியாகராஜன், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த பதிவை நான் போடுவதற்கு முன்பு பலமுறை யோசித்தேன். நான் மென்டலா பாதிச்சு இருக்கேன். ஏன் என்றால், பிக் பாஸ் வீட்டிற்கும் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைச்ச போது என்ன சுத்தி இருந்தவங்க. எல்லாரும் இப்படி விளையாடு, இந்த ஸ்டேட்டர்ஜியை பயன்படுத்தி விளையாடுனு நிறைய ஐடியாஸ் எனக்கு கொடுத்தாங்க. ஆனா அந்த ஐடியாஸ் நான் எதுவுமே பண்ணல, நான் ஏதோ ஒன்னு பண்ணுவேன் நான் பண்ற சின்ன விஷயமாக இருந்தாலும் மக்கள் எனக்கு நிச்சயமா சப்போர்ட் பண்ணுவாங்க அப்படின்னு நான் நம்பினேன்.

bigg boss 8 riya video

கண்ணீர் வீடியோ: பிக் பாஸ் வீட்டில், என் மனசுக்கு எது தப்புனு தோணுதோ அந்த இடத்துல எல்லாம் நான் அமைதியா இல்லாம அவங்களுக்காக நான் குரலும் கொடுத்து இருக்கேன். இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு எவ்வளவு அளவுக்கு ரீச் ஆச்சு அப்படின்னு எனக்கு தெரியல. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஏதோ ஒன்னு நான் பண்ணேன் என்கிற விஷயம் நிச்சயம் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அப்படி இருந்தும் நீங்க எனக்கு சர்போர்ட் பண்ணல. இது எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. பிரபலமாக இல்லாததால் ஆதரவு இல்லையா என நினைக்க தோன்றுகிறது. என்னை மாதிரியான ஆட்கள் முன்னேறக் கூடாதா, அப்படி மீறி வெளியில் வந்தாலும், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா என்கிற பல கேள்வி மனதில் ஓடிக்கிட்டு இருக்கு இதில் இருந்து நான் எப்படி வெளியில் வரப்போகிறேன் என்றே தெரியவில்லை. இருந்தாலும், எனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி என அந்த வீடியோவில் கண்ணீருடன் பேசி இருந்தார்.

வெறுப்பவர்கள் வெறுப்பார்கள்: இதற்கு முன்னாள் போட்டியாளரான அனிதா சம்பத், ரியாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். அதில், நான் பிபி பார்க்கவில்லை. நீங்கள் அங்கு போட்டியாளராக இருந்தீர்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. இந்த ரீலைக் கண்டுபிடித்து உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். ஆனால் இதை நான் சொல்ல வேண்டும். எந்த ஒரு பிக்பாஸில் நிகழ்ச்சியிலும் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை. நீங்கள் என்ன செய்தாலும்.. வெறுப்பவர்கள் நிச்சயமாக வெறுப்பார்கள், உன்னை நேசிப்பவர்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்பார்கள்..

சம்பளம்: கடைசி வரை உள்ளே இருந்தவர்கள் எல்லாம் இப்போது பிஸியாக இல்லை.. விமர்சனத்துடன் சீக்கிரம் வெளியே வந்தர்கள் அனைவரும் வேலையில்லாதவர்கள் அல்ல. இப்போது டிவி மற்றும் சமூக ஊடகங்களில் பிஸியாக இருப்பவர்கள் பெரும்பாலும் விமர்சனங்களுடன் விரைவில் வெளியே வந்தவர்கள் தான் என பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் ரியாவிற்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும், அதன்படி 14 நாட்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Read more about: bigg boss 8 riya video ரியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X