Bigg Boss 8 Tamil: நான் யாருக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் இல்லை.. யாருக்கு பளார் விட்டார் ஆனந்தி?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கிட்டத்தட்ட 75 நாட்களை எட்டிவிட்டது. இன்று அதாவது டிசம்பர் 18ஆம் தேதி 73வது நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக சென்றுகொண்டு உள்ளது. இப்படியான நிலையில் பிக் பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய போட்டியாளரான ஆர்.ஜெ. ஆனந்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ஒரு சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தாங்கள் களமிறங்கப்போவது உறுதி என்றால், வெளியில் தங்களுக்கான பி.ஆர். டீமினை தரமாக செய்துவைத்துவிட்டுப் போவதை கடந்த சில சீசன்களாகவே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த சீசனில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களும் அதேபோல், பி.ஆர். டீமினைத் தரமாக களமிறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை சமூக வலைதளத்திற்குள் நுழைந்தாலே பார்க்க முடிகின்றது.

bigg boss tamil season 8 bb8

போட்டியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியே போட்டியாளர்கள் செய்யும் தவறை, அல்லது போட்டியாளர்கள் ஒரு விஷயத்தை தவறாக புரிந்துகொண்டு வீட்டிற்குள் எதாவது செய்ய முற்படும்போது அவற்றை விளக்கினால், அல்லது விளக்கும்போது, போட்டியாளர்களின் தவறைச் சுட்டிக்காட்டினால், விஜய் சேதுபதியையே மிகவும் காட்டமாகவும் அந்த பி.ஆர். டீம்கள் விமர்சித்து வருகின்றன.

bigg boss tamil season 8 bb8

ஆர்.ஜெ. ஆனந்தி: இப்படியான நிலையில், எவிக்ட் ஆன போட்டியாளர் ஆனந்தி தனது எக்ஸ் பக்கத்திலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது, அவர் தனது பதிவில், " மிகவும் விஷமத்தனமான எண்ணம் கொண்டவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேதான் இருக்கின்றார்கள். ஆனால் போட்டியாளர்கள் மத்தியில் இப்படியான விஷமத்தனமான எண்ணங்கள் இல்லவே இல்லை. மேலும் போட்டியாளர்கள் வில்லன்கள் கிடையாது, அதேநேரத்தில் கதாநாயகர்களும் கிடையாது. அவர்கள் தவறு செய்யக் கூடிய சாதாரண மனிதர்கள். '

bigg boss tamil season 8 bb8

கொ.ப.செ: எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது. மேலும், என்னால் ஒருவரின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்க முடியாது. எனது ஹவுஸ்மேட்ஸ்தான் போட்டியை வெல்லப்போகின்றார்கள். அவர்கள் அவர்களின் சொந்த முயற்சியில், சொந்தத் திறமையில் வெல்லட்டும். அதுதான் சரியானது" எனது பதிவிட்டுள்ளார்.

bigg boss tamil season 8 bb8

காரணம்: இவரது பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகின்றது. அதேநேரத்தில், ஏற்கனவே குறிப்பிட்டத்தைப்போல், சில போட்டியாளர்களுக்காக வெளியே செயல்பட்டு வரும் பி.ஆர். டீமினைச் சேர்ந்தவர்கள், ஆனந்தியிடம், தங்களது போட்டியாளருக்கு ஆதரவாக எதாவது கருத்துக்கள் பதிவிடவும், வீடியோக்கள் பதிவிடவும் அணுகியிருப்பார்கள், அதனால்தான் ஆனந்தி கோபத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X