Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சௌந்தர்யா.. முதல் டாஸ்க் கொடுத்த போட்டியாளர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று முதல் அதாவது அக்டோபர் 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இது 8வது சீசன் என்பதால் இந்த சீசனை மிகவும் பிரமாண்டமாகவும் வித்தியாசமாகவும் நடத்த விஜய் டிவி திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்தார். இதனால் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்த சீசனின் 11வது போட்டியாளராக ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வந்த 'வேற மாறி ஆஃபீஸ்' நிகழ்ச்சியில் நடித்து வந்தவரும், மாடல் அழகியுமான சௌந்தர்யா நஞ்சுண்டன் வீட்டிற்குள் சென்றதும் அவருக்கு சக போட்டியாளர்கள் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர்.
சௌந்தர்யா நஞ்சுண்டனைப் பொறுத்தவரையில் மாடல் அழகியாக தனது கெரியரைத் தொடங்கினார். அதன் பின்னர் ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான 'வேற மாறி ஆஃபீஸ்' நிகழ்ச்சியில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இவர் கடந்த சீசனில் இறுதிவரை போட்டியாளராக இருந்த விஷ்ணுவின் நெருங்கிய தோழி. கடந்த சீசன் ஒளிபரப்பானபோது, விஷ்ணு குறித்து வெளியில் இருந்து கொண்டு அவருக்கு ஆதரவாக பேசியவர்களில் இவரும் ஒருவர்.

டாஸ்க்: பிக் பஸ் வீட்டிற்குள் சென்றதும் இவருக்கு முன் சென்ற 10 போட்டியாளர்களிடம் பிக் பாஸ் ஏற்கனவே சொல்லியிருந்த விஷயமான, வீட்டிற்குள் இருக்கும் கோடு, ஆண் பெண் சவால், யாருக்கு எந்த பெட்ரூம் என்பது குறித்து விளக்கிக் கொண்டு இருந்தனர். மேலும் உங்களுக்கு பிடித்த பெட்ரூமை தேர்வு செய்யச் சொன்னார்கள். போட்டியாளர்கள் இவ்வாறு கூறியதும், இது என்ன டாஸ்க்கா என சௌந்தர்யா நஞ்சுண்டன் கேள்வி எழுப்பினார். வீட்டிற்குள் முழுக்க முழுக்க வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு தேவதையைப் போல் சென்றார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும், சுமார் 4 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். இவரது குரல் கனீர் என இருப்பதால் சக போட்டியாளர் தர்ஷிதா கூறியது அவரைக் கோபப்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











