Ajithkumar: அஜித் குமாருக்கு வயசாகிடுச்சு.. பிக் பாஸ் செளந்தர்யா பேச்சால் கொந்தளித்த AK ஃபேன்ஸ்

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 தற்போது இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது, இன்னும் 10 நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வருகின்றது. இந்த சீசனின் வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இப்போதுவரை இருந்து வருகின்றது. இதில் பெரும்பாலான ரசிகர்களின் கணிப்பில் இருவரது பெயர் உள்ளது. ஒன்று, முத்துக்குமரன், மற்றொருவர் சௌந்தர்யா. இதில் சௌந்தர்யாவுக்கு பி.ஆர். புரோமோசன் கை கொடுக்கின்றது என்ற பேச்சும் உலாவுகின்றது. இதற்கிடையில், போட்டியில் சௌந்தர்யா நடிகர் அஜித் குறித்து பேசியது, அஜித் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 8இன் டாப் 8 போட்டியாளர்களாக ரயான், முத்துக்குமரன், அருண், தீபக், ஜாக்குலின், விஷால், சௌந்தர்யா மற்றும் பவித்ரா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இப்படியான நிலையில் இவர்களில் இருந்து டாப் 5 போட்டியாளர்களாக யாரெல்லாம் தேர்வாவார்கள் என்பது இந்த வார இறுதிக்குள்ளும், அல்லது அடுத்த வராத்தின் பாதியிலும் தெரிந்துவிடும். இப்படியான நிலையில் இந்த வாரம் போட்டியாளர் ரயானைத் தவிர, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இது இல்லாமல் ஏற்கனவே எலிமினேட் ஆன 8 போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து ஆட்டத்தையே வேறுமாதிரி மாற்றிவிட்டார்கள். இவர்களில் இருந்து கூட யாராவது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

bigg boss tamil soundarya ajithkumar

இப்படியான நிலையில் டாப் 8 போட்டியாளர்களுக்கும், எலிமினேட் ஆகி மீண்டும் வீட்டுக்குள் வந்திருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகின்றது. அப்படி இருக்கும்போது போட்டியாளர் சௌந்தர்யாவுக்கு கில்லி படத்தில் த்ரிஷா கதாபாத்திரமும், ஷிவ்குமாருக்கு மங்காத்தா படத்தில் இருக்கும் அஜித் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சௌந்தர்யாவும் ஷிவ்குமாரும் பேசிக்கொள்கின்றார்கள். அப்போது சௌந்தர்யா, அஜித்குமார் குறித்து பேசியது அஜித் ரசிகர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

bigg boss tamil soundarya ajithkumar

அஜித்குமார்: அதாவது, சௌந்தர்யா பேசும்போது, " எப்ப சார் நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்போம். உங்களுக்கு வயசாகிட்டே போகுது ஆனாலும் நடித்துக் கொண்டே இருக்கின்றீர்கள், உங்களுக்கு வயசே ஆகிடுச்சு ஆனாலும் நடித்துக் கொண்டே இருக்கின்றீர்கள். பைக் எடுத்துட்டு எங்கயோ போனீங்களே சார், திருப்பியும் வந்துட்டீங்களா சார்" என அஜித் கதாபாத்திரத்தில் உள்ள ஷிவ்குமாரைப் பார்த்து கேட்டார். இதற்கு ஷிவ்குமார் தக்க பதில் அளித்தார். '

bigg boss tamil soundarya ajithkumar

அவமரியாதை: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாக, அதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள், சௌந்தர்யா மீது கடுமையான கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அஜித் குறித்து மரியாதைக் குறைவாக சௌந்தர்யா பேசுவதாகவும், அதற்கு தக்க பதிலடி அஜித் ரசிகர்கள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் எனவும் இணையத்தில் குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில் கோபமுடன் பதிவிட்டு வருகின்றனர்.

bigg boss tamil soundarya ajithkumar

கோபம்: அஜித் குறித்து சௌந்தர்யா பேசியதில், உங்களுக்கு வயசாகிட்டே போகுது, பைக் எடுத்துட்டு எங்கயோ போனீங்களே சார், திரும்ப வந்துட்டீங்களா என்ற கேள்விகள், அஜித்தை அவமரியாதை செய்யும் வகையில் இருந்ததாக, ரசிகர்கள் கருதுவதால், ட்விட்டரில் சௌந்தர்யாவுக்கு எதிராக ஹேஷ்டேக் எல்லாம் தயார் செய்துவிட்டார்கள். அஜித் ரசிகர்களின் கோபம், பிக் பாஸ் வாக்குகளிலும் எதிரொலிக்கும் என்ற பேச்சும் நிலவுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X