மனைவியுடன் மல்லுக்கட்டிய நடிகர்.. கிசுகிசுக்கப்பட்ட நடிகையுடன் பிக் பாஸ் வீட்டில்.. கச்சேரி இருக்கு!

சென்னை: பிக் பாஸ் 7 சீசன்கள் வெற்றி கரமாக முடிந்த நிலையில், 8 வது சீசன் எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

இதில், சிம்பு,சரத்குமார், விஜய் சேதுபதி பெயர் அடிப்பட்ட நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று, விஜய் டிவி ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என ப்ரோமோவை வெளியிட்டது. இதையடுத்து இன்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. இதில தயாரிப்பாளர் ரவீந்திரன், மகாராஜா படத்தில் நடித்த சச்சனா, தர்ஷா குப்தா, என்எஸ்கே ரம்யாவின் இரண்டாவது கணவரான சத்யா,தீபக், ஆர்ஜே ஆனந்தி, சுனிதா, ஜெஃப்ரி, பவித்ரா ஜனனி, ரஞ்சித், சௌந்தர்யா, பாரதி கண்ணமா அருண் பிரசாத் ஆகியோர் உள்ளே வீட்டிற்குள் வந்துள்ளனர்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அதகளமாக இன்று ஆரம்பமாகி உள்ளது. கடந்த 7 சீசன்களை காட்டிலும் இந்த சீசன் பல்வேறு புதுமைகளுடன் இந்த 8-வது சீசன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிலையில், இம்முறை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமலுக்கு கச்சிதமான ஆள் விஜய் சேதுபதி என சொல்லும் அளவும் மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி.

தர்ஷிகா: சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில், ராதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை தர்ஷிகா. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி என்ற சீரியலில் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என்பது என் கனவு, இந்த மேடை இப்போது எனக்கு கிடைத்து இருக்கிறது அதை நான் சரியாக பயன்படுத்துவேன். இதனால் அழுத்தம் இருக்கும் இருந்தாலும் நான் அதை சமாளிப்பேன் என்றார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

விஜே விஷால்:விஜய் டிவியில் பாக்யலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதில் இடம்பிடித்த விஜே விஷால் தற்போது, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நான் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் சினிமாவில் வரவேண்டும் என்பதற்காகத்தான். இதற்காகத்தான் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறேன் என்றார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

அன்ஷிதா: மலையாளத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது தான் விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மூலம்அனைவர் மனதிலும் இடம் பிடித்தேன். இப்போது என் 27வயது ஆகிறது. இந்த வயதில் வாழ்க்கையில் நான் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். இதற்காக நான் தற்கொலை வரை சென்று இருக்கிறேன். வாழ்க்கையில், உண்மையான அன்புக்காக ஏங்குகிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய விஷயம் இந்த பிக் பாஸ் மேடை என்றார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

அர்னவ்: சீரியல்,அழகான குடும்பம் என அழகாக வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. உயரத்தில் இருந்த என் வாழ்க்கை திடீரென ஒரு நாள் கீழே வந்துவிட்டது. அந்த நேரத்தில் குடும்பம், என் நண்பர்கள், என யாருமே இல்லாமல் ஆகிவிட்டேன். அதில் இருந்து நான் மீண்டும் வரும் ஒரு முயற்சித்தான் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வருவது என்றார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8

நடிகர் அர்னவ், கேளடி கண்மணி சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகை திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருந்த நிலையில், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அர்னவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவுடம் அர்னவ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் நடிகை திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டி இருந்தார். அப்படி கிசுகிசுவில் அடிப்பட்ட அர்னவ் மற்றும்அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X