BB 8: பெண்கள் எல்லாம் மக்குங்க.. கூத்தடுச்சுட்டு இருக்கு - சொந்த கருத்தையும் கொட்டிய ஜேம்ஸ் வசந்தன்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்குவதற்கு முன்னரே பலரும் தாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தங்களது கருத்தினைத் தினந்தோறும் கூறுவதாக தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களின் கருத்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இரண்டாவது நாள் எபிசோட் குறித்து பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் ஜேம்ஸ் வசந்தன் அந்த வீடியோவில் பெண்கள் அணி குறித்து மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில், இன்றைய எபிசோடில் மிகவும் தெளிவாக உள்ளது. ஒரே விசயத்தை மிகவும் ஆழமாக விவாதிக்க வைத்துள்ளது. அதாவது பிக் பாஸ் கூறியதைப்போல் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் செல்லவேண்டும். ஆண்கள் எந்தவிதமான சண்டையும் சச்சரவும் இல்லாமலும் யாரையும் காயப்படுத்தாமல், யாருக்கும் காயம் ஏற்படாமல் முத்துக்குமரனை தேர்வு செய்தனர்.

bigg boss bigg boss tamil james vasanthan jacquline

ஆனால் பெண்கள் அணியில் ஒருவரை தேர்வு செய்வற்கு விவாதம் நடக்கின்றது, வாக்கெடுப்பு நடக்கின்றது, பழைய பகை உள்ளே வருகின்றது, சிலர் அழுகின்றார்கள் எவ்வளவு விசயம் நடக்கின்றது. இதனைப் பார்த்த பெண்களுக்கே பெண்கள் அணி மீது கோபம் வந்திருக்கும். பெண்களிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்படும்போது ஒரு அணியாக அவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதும் ஆண்களிடம் அதே பொறுப்பை கொடுத்தால் அதனை அவர்கள் எவ்வாறு அணுகுகின்றார்கள் என்பதற்கும் இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டு. மிகவும் பிரமாதமான பாடத்தை நடத்தியுள்ளார்கள். நீங்கள் பணம் செலவழித்து படித்தாலும் இந்த அனுபவத்தை அவர்களால் ஏற்படுத்த முடியாது.

பன்னாட்டு நிறுவனங்களில் ஒரு பொறுப்பினை பெண்களுக்கும் ஆண்களுக்கும் கொடுத்தால் என்ன நடக்கும், பெண்களுக்கு மட்டும் கொடுத்தால் என்ன நடக்கும், ஆண்களுக்கு மட்டும் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இன்றைய எபிசோடு பலருக்கு கற்றுக் கொடுத்திருக்கும். நானெல்லாம் ரொம்பவும் ரசிச்சேன். உங்களை அங்கு விட்டிருந்தால் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள் என்பது பிக்பாஸ் வீட்டிற்குள் போனால்தான் தெரியும்.

bigg boss bigg boss tamil james vasanthan jacquline

அலுவலகங்களில் நாங்கள் ஒன்றாக பணி புரியும்போது பெண்கள் அனைவரும் விவாதித்து ஒரு முடிவுக்கு வருகின்றோம் என சிலர் கூறலாம், ஆனால் முன் பின் தெரியாதவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் நன்கு பழக்கமான பெண்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் ஜாலியாக கூத்தடித்துக் கொண்டு இருப்பார்கள். இங்கு நடக்கும் அதே விவாதம்தான் கொஞ்சம் அடிகள் தள்ளி ஆண்கள் அணியும் செய்கின்றது. ஆனால் அங்கு இதுபோன்ற பிரச்னை இல்லை.

காய்கறிகள் வாங்கும்போது பெண்கள் தெரியாத்தனமாக இரண்டு பாக்கெட் உப்பினை எடுத்து வந்துவிட்டார்கள். ஆனால் ஆண்களிடம் அது இல்லாததால் அவர்களிடம் தண்ணீர் பிடித்துக் கொள்ள 106 நாட்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். ஆண்களும் ஓகே சொல்ல உப்பைக் கொடுத்து விடுகின்றனர். நான் ஏன் பெண்களை மக்கு எனக் கூறுகின்றேன் என்றால், ஆண்கள் சரி எனக் கூறியதை எந்த அடிப்படையில் ஒத்துக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. அதுதான் எனக்கு மக்குத்தனமாக தெரிகின்றது" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X