BB8: ஜாக்குலின் காது கிழிய கத்துவா.. ரத்தமே வந்துடும்.. சுரேஷ் தாத்தா வன்மத்தை வாரிக் கொட்டுறாரோ?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டு உள்ளது. இன்று அதாவது அக்டோபர் 9ஆம் தேதி விஜய் டிவி தரப்பில் வெளியிடப்பட்ட மூன்று ப்ரோமோக்களில் இரண்டு ப்ரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. குறிப்பாக முதல் ப்ரோமோவில் வி.ஜே விஷால் மற்றும் பவித்ரா ஜனனிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது தொடர்பாக இருந்தது. அதேபோல் இரண்டாவது ப்ரோமோவில் ரஞ்சித்தும் ஃபேட் மேன் ரவீந்தர் இடையே பெரும் சண்டையே ஏற்பட்டது தொடர்பாக இருந்தது. இன்றைய எபிசோடில் என்னவெல்லாம் நடக்குமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு சீசன்களுக்கு முன்னர் பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூவ் செய்யப்போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது நாள் எபிசோட் தொடர்பாக பேசி வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அந்த வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி பேச்சினைப் பார்த்த ரசிகர்கள் ஜாக்குலின் மீது வன்மத்தை கொட்டுவது போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது இரண்டாவது நாளில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் செல்ல வேண்டும் எனக் கூறினார். இதனை பலியாடு என விமர்சித்த சுரேஷ் சக்ரவர்த்தி, இந்த விவகாரத்தில் சுனிதாவின் செயல்பாடும் பேச்சும் சிறப்பாக இருந்தது. அதாவது ஜாக்குலின் தான் போவதாக கூறுகின்றார். ஆனால் ஹவுஸ்மேட் மறுக்க, உடனே ஜாக்குலின் நான் பெட்டில் படுக்காமல் வெளியே படுப்பதால்தானே என்னை அனுப்பமாட்டேன் எனக் கூறுகின்றீர்கள் என கேள்வி எழுப்புகின்றார்.

சுனிதா: ஆனால் சுனிதா தெளிவாக கூறிவிட்டார், நீ பெட்ல படு, அங்க படு, இங்க படு அது முக்கியம் இல்லை. ஆனால் நீ ஆண்கள் அணிக்கு போறதால டீம்க்கு எந்த பயனும் இல்லை, அதனால வேண்டாம் எனக் கூறுகின்றார். விஜய் டிவி பிரபலங்கள் அனைவருமே ஜாக்குலினை தொடர்ந்து அட்டாக் செய்து வருகின்றனர். ஏன் என்று தெரியவில்லை. சேனலில் இருந்தவர்கள்தான் அவ்வாறு செய்கின்றார்கள். ஆனால் ஜாக்குலினை ஆண்கள் அணிக்கு அனுப்பி இருந்தால் பெண்களுக்கு கொஞ்சம் பலன் கிடைத்திருக்கும்.

காது கிழிய கத்துவா: அதாவது ஜாக்குலின் காது கிழிய கத்துவா, காதுல ரத்தமே வந்துடும். அதனால ஆண்கள் எல்லாம் மெடிக்கல் ரூம் போறேன்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துல பெண்கள் தங்களுக்கு வேண்டியத சாதுச்சுக்கலாம். ஜாக்குலின் ஏற்கனவே ரவீந்தர்ட்டதான் அதிகமா பேசிட்டு இருக்கா. அவரும் யாருகிட்ட ரிவ்யூவ் சொல்றதுனு தெரியாம ரிவ்யூவ் கொடுத்துட்டு இருக்காரு.

பெண்கள் அணி: பிக்பாஸ் ஒரு விசயத்தை மறந்துட்டாரு. இந்த சீசனை ஆண்கள் - பெண்கள்னு பிரிச்சு இருக்காரு. ஆனால் இந்த சீசன் ஆண்கள், பெண்கள் மற்றும் பெண்கள் அப்படிதான் இருக்கு. பெண்களுக்கு உள்ளயே இரண்டு அணிகள் இருக்கு. ஆண்கள் இப்போதைக்கு ஒற்றுமையா இருக்கின்றார்கள். எப்போது இவர்களுக்குள் பூகம்பம் வெடிக்கும் எனத் தெரியவில்லை. உள்ளே போயிருப்பவர்கள் எல்லாம் சாதாரணமான ஆட்கள் கிடையாது" என பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











