BB 8: முத்துக்குமரனை பொளந்த விஜய் சேதுபதி.. பாராட்டுகளுக்கு மத்தியில் பளார்.. வேற லெவல் சம்பவம்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 மூன்று வாரங்களை நிறைவு செய்யவுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை சுவாரஸ்யமாக இல்லை என்றே பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பேச்சாக உள்ளது. ஒரு சில எப்பிசோட்கள் எல்லாம், பார்க்கவே முடியல என டிவியை பாதியில் ஆஃப் செய்ததாக பிக் பாஸ் ரசிகர்கள் இணையத்தில் புலம்புவதையும் பார்க்க முடிகின்றது. இப்படினா நிலையில், ரசிகர்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் ஆவலையும் கூட்டும் விஷயம் வீக் எண்ட் மட்டும்தான். வார இறுதி நாளில் விஜய் சேதுபதி வந்து போட்டியாளர்களை எப்படி பொளக்கப்போகின்றார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அப்படி இந்தவார இறுதியில் சனிகிழமை எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடப்பு சீசன் முந்தைய அனைத்து சீசன்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக, உள்ளது. ஆனால் அதுதான் ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை குறைத்ததற்கான காரணம் என கூறப்படுகின்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான போட்டியில் ஆண்களும் பெண்களும் மாறிமாறி வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் உடல் பலத்தை வைத்து விளையாடவேண்டிய இடத்தில் பெண்கள் தங்களால் முடிந்தவரை போராடுகின்றார்கள், ஆனால் இறுதியில் ஆண்களே வெற்றி பெற்று விடுகின்றார்கள். குறிப்பாக இரண்டாவது வார, கேப்டன்சி டாஸ்க்கில் பவித்ரா ஜனனி இறுதிவரை போராடினார். ஆனால் சத்யா தனது உடல் பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

bigg boss tamil vijay sethupathi

அதேபோல் கடந்த வாரத்தில் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் நடைபெற்றது. அதில் முதல் ரவுண்டில் பெண்கள் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். ஆனால் இரண்டாவது ரவுண்டில் ஆண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். இதில் ரசிகர்களை பயப்படுத்திய விஷயம் என்றால் ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினரை மிகவும் மூர்க்கமாக தாக்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டனர். இப்படி இருக்கும்போது, இது ரசிகர்களை அச்சமடையச் செய்தது.

விஜய் சேதுபதி: இது தொடர்பாக சனிகிழமை நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி கிட்டத்தட்ட ஆண்கள் அணியினரைப் பார்த்து, ' உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா' என்ற கேள்வியை கேட்காமல் கேட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஆண்கள் அணியினரைப் பொறுத்தவரையில், அங்கு மிகவும் திறமையான போட்டியாளராக அறியப்படுவது முத்துக்குமரன். ஒரு டாஸ்க் வைத்தால், ஆண்கள் அணியினர் கலந்துரையாடினாலும், இறுதியில் முத்துக்குமரன் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றனர். இதனை குரூப்பிசம் எனக் கூறமுடியாது என்றாலும், முத்துக்குமரன் யோசனை சரியானதாக இருக்கும் என ஆண்கள் அணியினர் நம்புகின்றனர் என்பதுதான் காரணம்.

bigg boss tamil vijay sethupathi

கில்லர் காயின் டாஸ்க்: ஆனால் கடந்த வாரத்தில் நடைபெற்ற கில்லர் காயின் டாஸ்க்கில் முத்துக்குமரனின் ஐடியா, பெண்கள் அணியினரை நிலைகுலையச் செய்தது. பெண்கள் தங்களுக்கு எதாவது அடி விழுந்து விடுமோ என்ற பயத்திலேயே விளையாடினார்கள். இது குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி முத்துக்குமரனை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ஆண்கள் அணியினரையும் விளாசினார். இதனால் முத்துக்குமரன் மிகவும் மனவேதனைப் பட்டு தலை குணிந்து நின்றார்.

பாராட்டு: முத்துக் குமரன இவ்வாறு இருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். சனிகிழமை எப்பிசோடில் முத்துக்குமரன் மற்றும் ஆண்கள் அணியினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டியும், பெண்கள் அணியில் சௌந்தர்யாவின் குரலை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் பேசியது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X