என்ன அப்படிக் கூப்பிடாதனு சொன்ன பவித்ரா ஜனனி.. எகிறிக்கொண்டு போன விஷால்.. தொடங்கிய புது பஞ்சாயத்து!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதாவது அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டு இருக்கும் 18 நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டனர். 24 மணிநேரத்தில் முதல் எவிக்ஷன் நடைபெற்றது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு போட்டியாளரின் குணாதிசயம் தெரியாமலேயே அவரை வெளியேற்றியது என்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் மூன்றாவது நாளின் முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஒரு நாளைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மொத்தம் மூன்று ப்ரோமோக்களை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது. அதாவது காலை 9 மணிக்கு ஒரு ப்ரோமோவும், நண்பகல் 12 மணிக்கு ஒரு ப்ரோமோவும், பிற்பகல் 3 மணிக்கு ஒரு ப்ரோமோவும் வெளியிட்டு வருகின்றது. இதன் மூலம் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி வருகின்றது. மேலும் இந்த ப்ரோமோக்களே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு எப்போதும் உள்ளது.

இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 9ஆம் தேதி போட்டியின் மூன்றாவது நாளினை ஒட்டி முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் விஷால் மற்றும் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்குச் சென்றுள்ள பவித்ரா ஜனனிக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது போட்டியாளர் விஷால், போட்டியாளர் பவித்ரா ஜனனியை டி சொல்லி அழைத்துள்ளார். ஆனால் பவித்ரா ஜனனிக்கு இது பிடிக்காததால், தன்னை டி சொல்லி அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

எகிறிய விஷால்: ஆனால் விஷால் தொடர்ந்து பவித்ரா ஜனனியை டி சொல்லி அழைத்துக் கொண்டு வந்துள்ளார். இதனால் பவித்ரா ஜனனிக்கும் விஷாலுக்கும் இடையில் பிரச்னை வாக்குவாதமாக தொடங்கியுள்ளது. ஆனால் இருவரும் குரலை உயர்த்திப் பேசியதால் மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் வந்து இருவருக்கும் இடையில் நடந்த பிரச்னையை தடுக்க முயற்சி செய்கின்றனர். குறிப்பாக விஷால் பேசும்போது 'நான் உன்னை மட்டும் இல்ல, எல்லோரையும் டி சொல்லித்தான் கூப்புடறேன். நான் அப்படித்தான் கூப்பிடுவேன். நான் எப்படி பேசனும்னு எனக்கு நீ சொல்லித்தரவேண்டாம் என பேசுகினார். மேலும் எகிறிக்கொண்டு செல்கின்றார்.

விடாமல் துரத்தும் ஜனனி: அப்போது பவித்ரா ஜனனி, ' என்னை டி சொல்லி கூப்பிடறது எனக்கு பிடிக்கல. நீ சொல்லாத நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுனு' எனக் கூறுகின்றார். அனைவரும் விஷாலைத் தடுக்க முயற்சிக்கின்றனர். மேலும் போட்டியாளர் தீபக், விஷாலை வெளியே அழைத்து வருகின்றார். ஆனால் பவித்ரா ஜனனி அங்கேயும் வந்து விஷாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையில் பிரச்னை பெரிதாகியுள்ளது.

கேம் ப்ளான்: பவித்ரா ஜனனி ஏற்கனவே ஆட்டத்தைப் புரிந்து கொண்டு, விளையாடி வருகின்றார். குறிப்பாக தன் மீது அட்டென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியில் இருந்து, ஆண்கள் அணிக்கு வருவதில் கவனமாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், சிறப்பாக பேசி ஆண்கள் அணிக்கும் சென்றுவிட்டார். இப்போது விஷாலுடன் பிரச்னையை ஏற்படுத்தி தன் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











