BB8: அவசரப்பட்ட பாய்ஸ்.. பட்டினியா கிடங்கனு சொல்லாமல் சொன்ன பிக்பாஸ்.. கொந்தளித்த தர்ஷா குப்தா!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. புது ஹோஸ்ட்டான விஜய் சேதுபதி 'ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு ' எனக் கூறி போட்டியாளர்களை லெஃப்ட் ரைட் வாங்கி வருகின்றார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய முதல் வாரத்தில் இருந்து விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துவிட்டார். இப்படியான நிலையில் பிக் பாஸ் சீசன் 8ன் 9வது நாளின் முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
இந்த சீசன் பாய்ஸ், கேர்ள்ஸ் என்ற தீமின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றது. அந்த வகையில், இரு அணியினரும் இரு வீடுகளில் தனித்தனியாக உள்ளனர். மேலும் வாரம் ஒருவர் மட்டும் எதிரணிக்குச் சென்று விளையாடவேண்டும். அப்படி முதல் வாரத்தில் பாய்ஸ் அணியில் இருந்து முத்துக்குமரன் கேர்ள்ஸ் அணிக்குச் சென்றார். அதேபோல் கேர்ள்ஸ் அணியில் இருந்து பவித்ரா ஜனனி பாய்ஸ் அணிக்குச் சென்றார். இவர்கள் இருவருக்கும், ஒரு பவர் கொடுக்கப்பட்டது. அதாவது, அவர்கள் இருவரும் எதிர் அணியில் இருந்து ஒருவரை நேரடியாக நாமினேஷன் செய்யலாம்.

அந்த வகையில் முத்துக்குமரன் இந்த வாரம் ஜாக்குலினை நேரடியாக நாமினேட் செய்துள்ளார். அதேபோல் பவித்ரா ஜனனி ஆண்கள் அணியில் உள்ளா தீபக்கை நேரடியாக நாமினேட் செய்துள்ளார். இந்நிலையில் இந்த வாரம் ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு தீபக் சென்றுள்ளார். பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு தர்ஷா குப்தா சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில், இரு அணியினரும், 'உருட்டு' டாஸ்க் விளையாடி தங்களின் மளிகைச் செலவிற்கான பணத்தினை சேர்த்தார்கள். அதில் ஆண்கள் அணியினர் அதிக தொகை சேர்த்தனர்.
ப்ரோமோ: இந்நிலையில் ஆண்கள் அணியில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, ரஞ்சித், வி.ஜே. விஷால் மற்றும் முத்துக்குமரன் சென்றனர். இதில் வி.ஜே. விஷால் தான் எடுத்த பொருட்கள் பெரும்பாலானவற்றில், அதிக பொருட்களை எடுத்தார். அதாவது 8 சர்க்கரை பாக்கெட் உள்ளது என்றால் 7 சர்க்கரை பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு, ஒரு சர்க்கரை பாக்கெட் மட்டும் மீதம் வைத்தார். இதன் மூலம் பெண்கள் அணிக்கு போதுமான அளவுக்கு சர்க்கரை கிடைக்காது. எனவே அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அதன் மூலம் அவர்களுக்கு ரிஸ்க்கான டாஸ்க்குகள் கொடுக்கலாம் என திட்டமிட்டார்கள்.

விதி: ஆனால் ஆண்கள் அணியினர் சம்பாதித்த அளவைவிட, அதிக தொகைக்கு பொருட்கள் வாங்கியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் கூறுகின்றார். அதாவது, பிக் பாஸ் விதிப்படி, தங்களது கையில் இருக்கும் தொகையைவிட அதிக ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால், வாங்கிய பொருட்கள் கொடுக்கப்படமாட்டாது. அதாவது 500 ரூபாய்க்கு அதிகமாக பொருட்கள் வாங்கியிருந்தல், ஏற்கனவே வாங்கிய பொருட்களில் இருந்து 50 சதவீத பொருட்கள் கொடுக்கப்படமாட்டாது. அந்தவகையில், இம்முறை ஆண்கள் அணியினர் கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பொருட்கள் வாங்கியுள்ளதாக பிக் பாஸ் தெரிவித்துள்ளார். மேலும், நான் பார்த்து எதாவது கொடுக்கின்றேன் அதை வைத்து சமைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறுகின்றார்.
தர்ஷா குப்தா: பிக்பாஸ் இப்படிக் கூறிவிட்டதால், பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்குச் சென்ற தர்ஷா குப்தா ஆண்கள் அணியினரைப் பார்த்து, ' பிளான் ஏ, பிளான் பி என பல பிளான்கள் போட்டீர்களே, உள்ளே யார் போகவேண்டும் என பிளான் போடவில்லையா? உங்களால் நானும் பட்டினியுடன் இருக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்புகின்றார். இதனைப் பார்த்த பெண்கள் அணியினர் அப்படி ஆடு தர்ஷா என ஆரவாரம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications











