BB8: மீசையை முறுக்கிக் கொண்டு விஜய் சேதுபதி செய்த தரமான செய்கை.. இப்படி இவரை பார்த்ததே இல்லையே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டியாளர்கள் மத்தியிலான ஆட்டம் பரபரப்பாகி உள்ளது. நாளுக்கு நாள் போட்டியாளர்களின் ஆட்டம் எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளதோ, அதே அளவுக்கு போட்டியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் முறையும் மெருகேறி உள்ளது. என்னதான் டாக் பேக்கில் விஜய் சேதுபதிக்கு ஃபீடிங் இருந்தாலும், சில நேரங்களில் அவரது அதிரடியான பேச்சு, நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடக்கத்தில் விஜய் சேதுபதி மீது, ரசிகர்களுக்கு தொடக்கத்தில் சந்தேகங்கள் இருந்தது. காரணம் கமல்ஹாசன் போன்ற ஆளுமை தொடர்ந்து 7 ஆண்டுகள், தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எந்த அளவுக்கு கையாளுவார்? அதிலும் குறிப்பாக, போட்டியை போட்டியாளர்களின் விளையாட்டு முறையைப் புரிந்துகொண்டு, அதில் இருக்கும் மற்றொரு கோணத்தை அவர் எந்த அளவுக்கு உள்வாங்கி, வார இறுதியில் அது குறித்து விவாதிப்பார் என்ற கேள்வியும் உடன் சேர்ந்து இருந்தது.

bigg boss tamil vijay sethupathi bb8 muthukumaran

ஆனால் விஜய் சேதுபதி முதல் வாரத்திலேயே தன் மீதான சந்தேகங்களை தவிடுபொடியாக்கிவிட்டார். ஆனால் இடையில் விஜய் சேதுபதியின் நடவடிக்கை, போட்டியாளர்களை அணுகும் முறை ஆகியவற்றின் மீது ரசிகர்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக போட்டியாளர்களை பேசவிடாமல், போட்டியாளர்களை மதிக்காமல், அவர்களை பதிலே சொல்லவிடாமல், அப்படி பதில் கூறினாலும் அதனை தான் எதிர்பார்க்கும் பதிலாக மாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றார். ஆனால் கமல்ஹாசன் இதுபோல ஒருநாளும் செய்ததில்லை என்றெல்லாம் ஒப்பிட்டார்கள். இதுமட்டும் இல்லாமல், போட்டியாளர்களை தனது மேதாவித்தனத்தைக் கொண்டு அவமதிக்கின்றார் என்றெல்லாம், போட்டியாளர்களின் பி.ஆர். டீம்கள் விஜய் சேதுபதியை சமூக வலைதளங்களில் அட்டாக் செய்தார்கள்.

bigg boss tamil vijay sethupathi bb8 muthukumaran

முத்துக்குமரன்: இவையெல்லாம் விஜய் சேதுபதி தெரிந்து கொண்டாரோ என்னவோ, அதில் தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை ஏற்றுக் கொண்டு, போட்டியை தொகுத்து வழங்குவதில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். போட்டியாளர்களில் மக்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களில் ஒருவர் முத்துக்குமரன். இவர் பல நேரங்களில் பிக் பாஸ் தரப்பில் இருந்து எதாவது, சில விதிமுறைகளை விதித்து ஒரு டாஸ்க்கைக் கொடுத்தால், முத்துக்குமரன் அதில் கூடுதலாக சில விதிமுறைகளை சேர்த்து டாஸ்கை தான் அணுகுவது மட்டும் இல்லாமல், மற்ற போட்டியாளர்களையும் அதனை ஏற்றுக்கொள்ள வைத்து விடுகின்றார்.

bigg boss tamil vijay sethupathi bb8 muthukumaran

ஃபயர் மோட்: இது தொடர்பாக ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகள் இருந்தது. மேலும் கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் பவித்ராவிடம் அவர் நடந்து கொண்டது என்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது ஆட்டமும் விதிமுறைகளுக்கு எதிராக இருந்தது. இது குறித்து விவாதிக்கும்போது, பவித்ராவிற்குச் சாதகமாக என்பதை விடவும், விதிமுறைகளை மீறிய முத்துக்குமரனை எச்சரித்தும் அவரது தவறைச் சுட்டிக்காட்டியும் பேசினார். அப்போது விஜய் சேதுபதி மீசை முறுக்கிக் கொண்டு நின்றது எல்லாம், பார்ப்பதற்கே வேற லெவலில் இருந்தது. இந்த வாரம், போட்டியாளர்களை விடவும் விஜய் சேதுபதிதான் ஃபயர் மோடில் இருந்தார் என, ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X