Bigg Boss 8: சுவாரஸ்யம்.. முத்துக்குமரனிடம் கண்ணீர் சிந்திய தீபக்.. பேமிலி மேட்டரைப் பேசி எமோஷ்னல்!
சென்னை: விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்த சீசனில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள், நடைபெற்றது. எவிக்ஷனில் பல தீடீர் திருப்பங்கள் நடைபெற்றது. அவை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், போட்டியாளர்கள் இடையில் நல்ல நட்பு உருவானது. அதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றவர்கள் என்றால் அது முத்துக்குமரன் மற்றும் தீபக் இடையிலான நட்புதான்.
இந்த சீசனில் அதிகம் இண்டுவிஜுவல் கேம் விளையாடி போட்டியாளர்களில் தீபக் மற்றும் முத்துக்குமரனைக் குறிப்பிடலாம். இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு, நாளடைவில் நட்பு என்ற பந்தத்தைக் கடந்து, அண்ணன் - தம்பி என்ற உறவுக்குள் இருவரும் பொருந்திப் போனார்கள். தீபக் துவண்டு நிற்கும்போது, முத்துக்குமரன் ஆதரவாக பேசுவதும், முத்துக்குமரன் கவலையாக இருக்கும்போது அவருக்கு ஆறுதலாக தீபக் இருப்பதும் என இந்த சீசனில் பார்க்கவே அழகாக இருந்தது.

இருவரும் ஒருவரது தவறைச் சுட்டிக் காட்டத் தயங்கியதில்லை. மேலும், தனது தவறுகளைக் கூறுகின்றார் என எந்த இடத்திலும் இருவரும் விலகவும் இல்லை. இதனாலே இவர்களின் அண்ணன் - தம்பி பாசப்பிணைப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் இவருக்காக அவர் விளையாடுவதும், அவருக்காக இவர் விளையாடுவதும், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்வதும் என மொத்த ஆட்டமுமே ரசனைக்குரியது.
எமோஷ்னல்: தீபக் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் எலிமினேட் செய்யப்பட்டார். அப்போது மிகவும் உடைந்த முத்துக்குமரன், தீபக்கை நோக்கி, ' உன்னைக் கொல்லப்போறேன் பாரு' என அழுது கொண்டே கூறினார். வெளியே சென்ற தீபக், முத்துக்குமரா, என் தம்பி, உனக்காக இங்க அன்பு நிறைய காத்துக் கொண்டு இருக்கு எனக் கூறினார்.

தீபக்: மீண்டும் வீட்டிற்குள் வந்த தீபக், முத்துக் குமரனை ஓடி வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அதன் பின்னர் முத்துவிடம் தனியாக பேசிக் கொண்டு இருக்கும்போது, "குமரா, நீ வரனும்டா, என்னோட வீட்டுலயே என்னை வேற மாதிரி பாக்கறாங்க, நான் சொன்னா கேக்கறாங்கடா, எனது பேச்சுக்கு மதிப்பு கொடுக்கறாங்க, சந்தோஷமா இருக்குடா குமரா" எனக் கூறுகின்றார்.
முத்துக்குமரன்: அதற்கு முத்துக்குமரன், " நீ சரியா பேசுவனு எல்லாருக்கும் தெரியும் அண்ணே, நீ பெரிய மதிப்பை சம்பாதித்து இருக்க, உன்னோட இத்தனை ஆண்டு கால உழைப்புக்கு அறிவுக்கும் அனுபவத்திற்கும் என்ன மதிப்பை சம்பாதிக்கனுமோ அதைச் சம்பாதித்துவிட்டாய்" எனக் கூறுகின்றார். முத்துக்குமரனிடம் தீபக் அழுது கொண்டே பேசியது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.



Click it and Unblock the Notifications











