Bigg Boss Tamil: முதல் நாளில் இருந்தே ஜாக்குலினை நோண்டும் சுனிதா.. வெளிய நடந்த பிரச்னைதான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து அதாவது அக்டோபர் 6ஆம் தேதியில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டு இருக்கும் 18 நட்சத்திரங்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டனர். 24 மணிநேரத்தில் முதல் எவிக்ஷன் நடைபெற்றது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் நாமினேஷன் தொடங்கிவிட்டது. இதில் அதிகமானோர் டார்கெட் செய்தவர்களில் தொகுப்பாளர் ஜாக்குலின் மிகவும் முக்கியமானவராக உள்ளார்.
ஜாக்குலினுக்கு ஆண்கள் தரப்பில் இருந்தும் பெண்கள் தரப்பில் இருந்தும் வாக்குகள் விழுந்தது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்ததோ இல்லையோ, ஜாக்குலினுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதுமட்டும் இல்லாமல், சக போட்டியாளரான சுனிதா முதல் நாளில் இருந்து ஜாக்குலினை டார்கெட் செய்து வருகின்றார். இது குறித்து ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஜாக்குலின் மற்றும் சுனிதா என இருவருமே விஜய் டிவி பிரபலங்கள்தான் என்றாலும், சுனிதா சீனியர். ஆனால் ஜாக்குலின் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். ஆனால் சுனிதா ஜோடி நம்பர் 1இல் தொடங்கி இப்போது குக் வித் கோமாளியில் கோமாளி வரை விஜய் டிவியில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளார்.

ஈகோ கிளாஷ்: இதனால் ஜாக்குலினுக்கும் சுனிதாவுக்கும் இடையில் தற்போது நடப்பது சீனியர் ஜூனியர் ஈகோ கிளாஷ் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சுனிதா பெண்கள் பிரிவில் முதல் நாளில் இருந்தே தனது சக போட்டியாளர்களை மூளைச் சலவை செய்து வருகின்றார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு சில போட்டியாளர்கள் சுனிதாவின் சொல்லுக்கு மயங்கி சுனிதா சொல்வதைக் கேட்கின்றார்கள் எனவும், சௌந்தர்யா போன்றோர் இப்போதைக்கு விட்டுப் பிடிக்கலாம் என்ற மனநிலையில் அமைதியாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெட்ரூம்: ஆனால் சுனிதாவின் பேச்சுக்கு முதல் நாளில் இருந்தே மதிப்பு கொடுக்காமல், இன்னும் சொல்லப்போனால் காது கொடுத்துக் கூட கேட்க ஜாக்குலின் தயாராக இல்லை. அதனால்தான் பெண்களுக்கான பெட்ரூமில் போய் படுக்காமல், முதல் நாளில் தனியாக போய்ப்படுத்தார். அதேநேரத்தில் ஜாக்குலின் முதல் நாள் எவிக்ஷனில் சுனிதாவின் பெயரைச் சொல்லவில்லை, மாறாக சச்சிதா பெயரைச் சொன்னார். ஆனால் சுனிதா முதல் நாளில் இருந்தே ஜாக்குலினை டார்கெட் செய்து வருகின்றார்.

பிரச்னை: இன்றைய முதல் ப்ரோமோவில் கூட சுனிதாவுக்கும் ஜாக்குலினுக்கும் பிரச்னை வெடித்தது தெரியவந்துள்ளது. இன்னும் பிக் பாஸ் தரப்பில் பெரிய டாஸ்க் எதுவும் கொடுக்கப்படவில்லை. அப்படி டாஸ்க் கொடுத்து அதில் இருவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு இதுபோல் இருவரும் கீரியும் பாம்புமாக இருந்தால் அதில் ஒரு காரணம் உண்டு. ஆனால், ஆட்டமே இன்னும் முழுவதுமாக தொடங்காத நிலையில் சுனிதா, ஜாக்குலினை டார்கெட் செய்வதற்கு, இருவருக்கும் ஏற்கனவே விஜய் டீவியில் ஏற்பட்ட பிரச்னைதான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் ஜாக்குலினை நாமினேசனில் இருந்து காப்பாற்றவே விஜய் டிவி தரப்பில் இருந்து புரோமோக்கள் வெளியிடப்படுவதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











