மொத்த பிளானும் சொதப்பல்.. ஒரு ஸ்டேட்டர்ஜியும் கைகொடுக்கல..கம்மி சம்பளத்துடன் வெளியேறிய ரியா!
சென்னை: பிக் பாஸ் சீசன் எட்டு நிகழ்ச்சியில் ஆறாவது வாரத்தில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ரியா தியாகராஜன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இவர் வீட்டில் இருந்த 14 நாட்களில் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஆறாவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்கு நடுவே கோதாவரி வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடு என்பது போல, முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் டீம், பெண்கள் டீம் என தனித்தனியாக விளையாடி வருகிறார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை நடந்து வருகிறது. இதில் ஐந்தாவது வாரத்தில் சுனிதா குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 8: ஆறாவது வாரம் நடந்த கேப்டன்சி டாஸ்கில் அருண் பிரசாத் வென்று தலைவரானார். இந்த வாரம் பள்ளி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் மாணவர்களாக மாறியது ரசிக்கும்படி இருந்தது. இதையடுத்து, இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், ரஞ்சித், ரியா, சாச்சனா, சத்யா, சிவகுமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி ஆகியோர் நாமினேஷனில் சிக்கினார்கள் அதில் தீபக் நாமினேஷன் பிரீ பாஸ் பெற்று காப்பாற்றப்பட்டார்.
ரியா வாங்கிய சம்பளம்: இதையடுத்து, ஆறாவது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்த ரியா தியாகராஜன் வெளியேற்றப்பட்டார். வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அவர் வந்ததுமே பெரிய திட்டத்தோடு வந்து அனைத்து கேமராவையும் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் ஸ்டேட்டர்ஜி என பேசிக்கொண்டு இருந்த இவர் 14 நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்த 14 நாட்களுக்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரியாவிற்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாகவும், அதன்படி 14 நாட்களுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











