BB8: ஃபேமிலி வீக்கில் அட்டாக் செய்யப்படும் அருண்.. எல்லாரும் கட்டம் கட்டுறாங்களே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் யார் டாப் 5 போட்டியாளர்களாக வீட்டிற்குள் இருக்கப்போகின்றார்கள் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நாளுக்கு நாள் போட்டியாளர்கள் சவாலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதால், ரசிகர்களுக்கே யாருக்கு வாக்கு செலுத்தலாம் என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு ஆட்டம் மாறியுள்ளது. அந்த வகையில் இந்த வாராம் போட்டியாளர்களுக்கு டாஸ்க் எதுவும் இல்லை. மேலும் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் நண்பர்களும் வந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில், நேற்றைய அதாவது டிசம்பர் 24ஆம் தேதி எபிசோடில் இருந்து ஃபேமிலி ரவுண்ட் தொடங்கிவிட்டது. அதில் வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் அருண் மீதுதான் அதிகப்படியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

நேற்றைய எபிசோடில் மொத்தம் நான்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரிடமும் பிக் பாஸ் தரப்பில் இருந்து வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் மீது முரண்பாடு உள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதில், முதலில் வீட்டுக்குள் நுழைந்த தீபக் குடும்பத்தினர், போட்டியாளர் அருண் மீது முரண்பாடு இருப்பதாக கூறினர். குறிப்பாக, " இன்றைக்கு பிரைமில் இருக்கும் ஆர்ட்டிஸ்ட் நான். என்னையவே தீபக் இப்படி நடத்துகின்றார் என்றால், அவரது டிரைவரை எப்படி நடத்துவார்" என பேசியிருந்தார்.

bigg boss tamil 8 arun

அதன் பின்னர் வந்த மஞ்சரி குடும்பத்தினரும், அருணிடம், கிச்சனில் முதலில் நீங்கள்தான் (அருண்) மஞ்சரியிடம் புராஜெக்ட் செய்யறீங்க எனும் வார்த்தை முதலில் நீங்கள்தான் கூறினீர்கள். ஆனால் மஞ்சரிதான் கூறினார் என திருப்பிவிட்டுவிட்டீர்கள். அதுதான் எனக்கு கஷ்டமாகப் போய்விட்டது என மஞ்சரியின் அம்மா கூறினார்.

அருண்: அதேபோல், வீட்டிற்குள் வந்த விஷாலின் குடும்பத்தினரில், விஷாலின் அப்பாவும் அருண் மீதுதான் முரண்பாடு கருத்து இருப்பதாக கூறினார். அதாவது, " நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் எனக் கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள், எதனால்? நண்பர்கள் என்றால் உங்களுக்கு இடையில் சண்டை வந்திருக்க கூடாது. உன்னைக் காப்பாற்றத்தான் விஷால் ஒரு விஷயத்தைச் செய்தான் என்பது கூட ஒருவர் சொல்லித்தான் தெரிந்தது, உனக்காகவே அது தெரியவில்லை. ஜாக்குலின் சொன்ன பின்னர்தான் உனக்கு தெரிந்தது. இவ்வளவுநாள் ஒற்றுமையாக இருந்துவிட்டு, அந்த ஒரு நாள் மட்டும் சண்டை வந்துடுச்சு ஏன் என கேட்கத் தோன்றியது?" எனக் கூறினார்.

bigg boss tamil 8 arun

மன்னிப்பு: வீட்டிற்கு வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் அருண் மீதே, முரண்பாடு தெரிவித்துள்ளனர். தன் மீது வைக்கப்பட்ட முரண்பாடுகளை சிரித்த முகத்துடன் உள்வாங்கிக் கொண்ட அருண், தான் பேசியதை நியாப்படுத்தவில்லை. மேலும் போட்டியாளர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

காரணம்: ஆட்டத்தின் தொடக்கத்தில், அருண் மற்ற போட்டியாளர்கள் அனைவரிடமும் அன்பாக இருக்கின்றேன், கூடுமானவரை அன்பாக இருக்க முயற்சிக்கின்றேன் எனக் கூறினார். ஆனால் இந்தப் போட்டியில் முதல் சில வாரங்களுக்குப் பின்னர், அருண் அனைத்து போட்டியாளர்களுடன் சண்டை போட்டுக்கொண்டுதான் உள்ளார். அதன் வெளிப்பாடாகத்தான் ஃபேமிலி வீக்கில் அருண் மீது குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் அதிகம் எழக் காரணம் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X