Bigg Boss 8 Tamil: அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் லேடீஸ்.. நடுவில் சென்று ஸ்கோர் செய்யும் தீபக்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வீடு, அலுவலகம், விளையாட்டு மைதானம், பயண நேரம் என அனைத்து இடங்களிலும் பிக் பாஸ் பற்றிய பேச்சுதான். முதல் சீசனில் இருந்து பிக் பாஸை பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாரே போட்டியாளர்களும் சில இடங்களில் ஸ்கோர் செய்துவிடுகின்றனர். அதேநேரத்தில் போட்டியாளர்களாக உள்ளே செல்லும் பிரபலங்களும் தாங்கள் 100 நாட்கள் உள்ளே இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனை, வீட்டிற்குள் சென்ற நொடியில் இருந்தே தொடங்கிவிட்டனர் என்றே கூறலாம். அப்படியான ஒரு சம்பவம் இரண்டாவது நாளில் நடைபெறுள்ளது.

இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெற்ற தர்ஷிகா தன்னை ஒரு சிறப்பான கேப்டனாக மக்கள் முன் வெளிக்காட்டவேண்டும் என முயற்சி செய்து கொண்டு உள்ளார் என்ற பேச்சு லைட்டாக ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் கேப்டன் தர்ஷிகா முன் ஒரு பிரச்னை முன் வைக்கப்படுகின்றது. அந்தப் பிரச்னை குறித்து வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

bigg boss tamil season 8 bigg boss 8 tamil deepak

அதாவது கேப்டன் தர்ஷிகா பேசுகையில், ஒரே விஷயத்தை திருப்பித் திருப்பி ஒருவர் செய்கின்றார் என்றால் நமக்கே ஒன்று தோன்றவேண்டும். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் மிகவும் நல்ல குணம் படைத்தவராக இருக்கலாம். ஒரு கிளாஸை நான் முதல் நாள் கழுவுவேன் , இரண்டாவது நாள் கழுவுவேன். ஆனால் என்னால் மூன்றாவது நாள் அதனைச் செய்ய முடியாது. அனைவருக்கும் ஒரு ஒழுக்கம் முக்கியம். யாரு தவறு செய்தாலும் அவர்களை உடனே கூப்பிட்டு கேளுங்கள். நான் இரண்டு முறை கழுவியுள்ளதால்தான் மூன்றாவது முறை நான் கழுவமாட்டேன் எனக் கூறுங்கள் எனக் கூறுகின்றார். கேப்டன் தர்ஷிகா இவ்வாறு பேசும்போது போட்டியாளர்கள் ரஞ்சித் மற்றும் அர்னவ் ஆகியோர் அவரது வாதத்தை ஏற்பதைப் போல் தலையை ஆட்டுகின்றார்கள்.

bigg boss tamil season 8 bigg boss 8 tamil deepak

ஜாக்குலின்: அதேபோல், அந்த விவாதத்தின்போது போட்டியாளர் ஜாக்குலின் பேசுகையில், " இங்கு இருக்கும் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள் என்றால், ஒருவேளை அவர்களின் இயற்கையான குணமே அதுவாகக்கூட இருக்கலாம். மிகவும் அன்பானவராக தன்னைக் காட்டிக்கொள்ள, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்கின்றார்கள். ஆனால் அது ஒருமாதிரி இருக்கின்றது" எனப் பேசுகின்றார்.

bigg boss tamil season 8 bigg boss 8 tamil deepak

தீபக்: அப்போது போட்டியாளர் தீபக் பேசும்போது, “ எல்லோரும் ஒவ்வொருவரையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் உங்கள் கண்ணுக்கு ஒருவர் தவறு செய்வது தெரிகின்றது என்றால், அவரைக் கூப்பிட்டு, நீங்கள் இதுபோன்ற தவறைச் செய்கின்றீர்கள் எனக் எச்சரியுங்கள். எச்சரித்த பின்னர் இதுபோன்ற தவறை அவர் மீண்டும் செய்கின்றார் என்றால், அவரைக் கேள்வி கேளுங்கள்” எனப் பேசுகின்றார்.

bigg boss tamil season 8 bigg boss 8 tamil deepak

கமெண்ட்: இந்த விவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தீபக் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக கட்டாயம் இருப்பார் எனத் தோன்றுகின்றது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். நான் கூட ரியோ மாதிரி ஆகிடுவாரோனு நெனச்சுட்டு இருந்தேன். ஆனால் உண்மையிலேயே தீபக் நன்றாகவே விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடுகின்றார் என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவரோ, லேடீஸ் அடிச்சுக்கிட்டு கிடக்கும்போது தீபக் நல்லா ஸ்கோர் பண்றாரேப்பா என கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X