Bigg Boss 8:வெட்கம் மானம் இல்லையா? பவித்ராவை குத்தி குத்திக் காட்டும் தர்ஷிகா.. இட்ஸ் வெரி பேட் ப்ரோ
சென்னை: பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கியதில், எப்போதுதான் இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக பரபரப்பாக இருக்கும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இன்றைய அதாவது, டிசம்பர் 4ஆம் தேதி எபிசோட் தலைவாழை விருந்தாக அமையப்போகின்றது. ஆமாம், வழக்கமாக ஒரு நாளைக்கு மூன்று ப்ரோமோக்களை மட்டும் வெளியிடும் விஜய் டிவி இன்றைக்கு மட்டும் இதுவரை 5 ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆவலை பெருக்கியது மட்டும் இல்லாமல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5வது ப்ரோமோ குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் தரப்பில் இருந்து சில டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றது. அதில், போட்டியாளர்கள் தங்களது கதாபாத்திரங்களாகவே அந்த டாஸ்க் முடியும் வரை நடிக்க வேண்டும். இப்படியான நிலையில், இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்காக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க், ஏஞ்சல் - டெவில் டாஸ்க். இதில் போட்டியாளர்களில் சிலர் ஏஞ்சலாகவும் சிலர் டெவிலாகவும் உள்ளனர். டெவில்களின் வேலை, ஏஞ்சல்களை பொறுமை இழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டார்களைப் பெறவேண்டும். ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதியாக பொறுமையாக இருக்க வேண்டும்.

முட்டை: இதில் ஏஞ்சலாக உள்ள பவித்ராவின் முகத்தில் டெவிலாக உள்ள போட்டியாளர் மஞ்சரி, முட்டையை பூச வைத்தார். மேலும், முட்டையை உடைத்து அவரது வாயில் ஊற்றினார். இதனால் மனம் உடைந்த பவித்ரா அழுதார். ஆனால் டாஸ்க் என்பதால் அவர் கோபத்தை வெளிப்படுத்தாமல் இன்னும் சொல்லப்போனால் கோபம் அடையாமல் இருந்தார்.
மானம்: இப்படியான நிலையில், பிக் பஸ் வீட்டில் பவித்ராவின் தோழியாக உள்ள தர்ஷிகா இந்த டாஸ்க்கில் டெவிலாக உள்ளார். தர்ஷிகா, பவித்ராவிடம் சென்று பேசும் வார்த்தைகள்தான் 5வது ப்ரோமோவின் ஹைலைட். ஆமாம், பவித்ராவிடம் சென்ற தர்ஷிகா, " ஏன்? உனக்கு வெட்கம், மானம், சூடு. சொரணை இல்லை? 10 முட்டையை எடுத்து மூஞ்சியில தடவி இருக்க, முட்டைய குடுச்சுருக்க, உனக்கு வாமிட் வர்ற அளவுக்கு உன்ன ஒருத்தி வெறுப்பு ஏத்தியிருக்கா?

அவசியம் இல்லை: இவ்வளவு நேரம் ஒருத்தி, உன்னை வெச்சு செஞ்சு இருக்கா, அப்பவும் நீ வாய மூடீட்டு இருக்கனா, நீ நடிச்சுட்டு இருக்கனு அர்த்தம். இந்த மாதிரி ரியல் லைஃப்லயும் நீ தேவதையா இருக்கனும்னு அவசியம் இல்லை பவித்ரா" என பேசுகின்றார். இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்த பவித்ரா சிரித்துக் கொண்டு உள்ளார். ஆனால் தனியாக கேமரா முன் வந்து நின்று அழுகின்றார். மேலும் இவரது வாயில் முட்டை உடைத்து ஊற்றிய பின் அவர் வாந்தி எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











