Bigg Boss Tamil 8: அதுக்குள்ள 4 ப்ரோமோவா? ஆத்திரத்தில் வார்த்தையை விட்ட அன்ஷிதா.. பிக்பாஸில் அடிதடி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டு உள்ளது. இப்படியான நிலையில் போட்டியாளர்களுக்கு இடையில் அவ்வப்போது, சில மனஸ்தாபங்கள் ஏற்படுவதும், அதனால் வாக்கு வாதங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இப்படியான நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களை தேவதைகள் மற்றும் பேய்களாக பிக் பாஸ் தரப்பில் பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களுக்குள் பலருக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக போட்டியாளர்கள் கோபமடைந்து, வார்த்தைகளை வீசி வருகின்றனர். வழக்கமாக ஒரு நாளைக்கு 3 ப்ரோமோக்களை மட்டும் விடும் பிக் பாஸ் டீம் இன்று அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி மட்டும் ப்ரோமோக்களை வாரி வழங்கி வருகின்றனர்.
இதில் முதல் ப்ரோமோவில் டாஸ்க் குறித்து தெளிவாகச் சொல்லப்படுகின்றது. அதாவது, நாமினேஷன் ஃபீரி பாஸ்க்காக தேவதைகளுக்கும் பேய்களுக்குள்ளும் போட்டி நடைபெறுகின்றது. மிகவும் பொறுமையாக இருக்கும் தேவதைகளுக்கும், தேவதைகளை பொறுமையிழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து அதிக ஸ்டார்களை வாங்கும் பேய்க்கும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கொடுக்கப்படும் என்பதுதான் டாஸ்க்.

இந்த டாஸ்க் தொடங்கியதில் இருந்து போட்டியாளர்களுக்குள் இருந்த ஆத்திரமும் கோபமும் பீறிட்டு வெளியே வந்துவிட்டது எனக் கூறும் அளவுக்கு ஒருவருக்கு ஒருவர் வார்த்தைகளால் திட்டிக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பேய் கதாபாத்திரத்தில் இருக்கும் போட்டியாளர்களான சௌந்தர்யா. தர்ஷிகா மற்றும் ஜாக்குலின் ஆகியோருக்கு இடையில் பெரும் வாக்கு வாதமே ஏற்பட்டுவிட்டது.
தள்ளு முள்ளு: குறிப்பாக, ஜாக்குலின் வாயை மூடு, பைத்தியம் போன்ற வார்த்தைகளை தர்ஷிகாவை நோக்கி பேச, உடனே தர்ஷிகா, பார்த்து பேசு ஜாக்குலின் இது ஒன்னும் உங்க அப்பன் வீடு இல்லை எனக் கூறினார். இதனால், ஜாக்குலினுக்கு ஆதரவாக சௌந்தர்யா பேச, எதுக்காக ஜாக்குலின் அப்பாவை இழுக்குற எனக் கோபமாக கேட்டுக் கொண்டே, தர்ஷிகாவைத் தள்ளினார். இதனால் இவர்களுக்கு இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

வார்த்தை: அதேபோல் தேவதையாக இருக்கும் அன்ஷிதாவுக்கு பேயாக இருக்கும் சாச்சனா ஊட்டி விட்டுள்ளார். ஊட்டி விடும்போது சிந்திய உணவையும், தரையில் இருந்து எடுத்து ஊட்டி விட்டுள்ளார் சாச்சனா. இதனால் பெரும் கோபமடைந்த, அன்ஷிதா, பிக் பாஸ் வீடே அதிரும் அளவுக்கு கத்தினார். மேலும் சாச்சனாவை நோக்கி, நீ குட்டிச் சாத்தான் எனக் கூறிக் கத்தினார். தேவதைகள் கத்தக் கூடாது என பேயாக உள்ள தீபக் கூற, உடனே அன்ஷிதாவோ, எந்தத் தேங்கானாலும் சரி, எனக்கு கோபம் வருது எனக் கூறி தனது தலைமுடியை தானே பிய்த்துக் கொண்டார்.
கேள்வி: மேலும் சாச்சனா நீ உண்மையிலேயே டெவில், குட்டிப் பிசாசு, குட்டிப் பிசாசு, அந்தக் கதவைத் திறங்க நான் வெளியே போகின்றேன் என பிக் பாஸ் வீட்டின் முகப்பு வாசல் கதவிடம் சென்று நின்று கொண்டார். இந்த ப்ரோமோ நான்காவது ப்ரோமாவக வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. அதாவது, இப்பவே நான்கு ப்ரோமோக்களா? பிக்பாஸ் வீட்டில் என்னப்பா நடக்குது? என்ற கேள்வியைக் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











