Bigg Boss Vijay Sethupathi Salary: வெறும் 15 நாட்களுக்கு இத்தனை கோடியா?.. வெயிட் காட்டும் விஜய்சேதுபதி!

சென்னை: விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப்போகிறது. அதன் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிய ஹோஸ்ட்டாக விஜய் சேதுபதி மாறியுள்ளார்.

காரில் மட்டும் சென்றால் போதாது, மக்களை சந்திக்க வேண்டும் என்பது போல ப்ரோமோவை இயக்குநர் தரமாக வடிவமைத்துள்ளார். மக்கள் செல்வனுக்கு மக்களை சந்திப்பதில் என்ன பிரச்சனையா என்ன? அவரும் கீழே இறங்கி மக்களிடம் செல்ல ஒவ்வொருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் அட்வைஸ் வழங்கும் விதமாக அந்த ப்ரோமோ உருவாகியுள்ளது.

bigg boss tamil bigg boss tamil 8 vijay sethupathi

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த சீசனில் விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எத்தனை கோடி சம்பளம் அதை சொல்லுங்க பாஸ் முதலில் என ஆர்வத்துடன் கேட்கும் ரசிகர்களுக்கான விடையை இங்கே பார்க்கலாம் வாங்க..

கமல்ஹாசன் சம்பளம் 130 கோடி: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு கடந்த சீசனில் மட்டும் அதிகபட்சமாக 130 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை 3 கோடி மக்கள் பார்க்கின்றனர் என கமல்ஹாசன் கூறியுள்ளார். சினிமாவில் நடிப்பதை விட பிக் பாஸில் வெயிட்டான சம்பளத்தை கமல் வாங்கிய நிலையில், விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

15 நாட்கள் தான் வேலை: பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெற்றாலும், அதனை தொகுத்து வழங்கும் பிரபலங்களுக்கு அத்தனை நாட்களும் வேலை இல்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ஷோவில் தான் அவர்கள் வருவார்கள். அதற்கான படப்பிடிப்பு அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை அன்று இவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும். ஒரே நாளில் 2 நாளுக்கான ஷூட்டிங்கை நடத்தி விடுவார்கள். அதாவது ஒட்டுமொத்தமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் 15 நாட்கள் தான் வேலை செய்வார் எனக் கூறுகின்றனர்.

விஜய் சேதுபதி சம்பளம்: பிக் பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உலக நாயகனுக்கு கொடுத்ததை விட பாதி தான் சம்பளம் என்றாலும், விஜய் சேதுபதி படங்களில் ஹீரோவாக நடிக்க 30 முதல் 35 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், இது அதிகம் என்றே கூறுகின்றனர்.

ஆரம்பமே அசத்தல்: விஜய் சேதுபதி எப்படி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய ஸ்டைலில் தான் கொண்டு செல்வார் என்றும் நிச்சயம் முதல் ப்ரோமோவை போல பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியும் புதுசா ரசிகர்களுக்கு இருக்கும் என அனைவரும் இந்த முறையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிக் பாஸ் போட்டியாளர்களாக இந்த முறை எத்தனை சர்ச்சை பிரபலங்கள் உள்ளே வரப் போகின்றனர். என்ன என்ன சர்ச்சைகள் வெடிக்கப் போகிறது. யாரு அந்த 50 லட்சம் பணத்தை தட்டித் தூக்க போறாங்க என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X