Jacquline Eviction: எவிக்ட் செய்யப்பட்ட ஜாக்குலின்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்னப்பா நடக்குது?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி வாரத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 18 நேரடி போட்டியாளர்கள் 6 வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர்கள் என மொத்தம் 24 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். இந்த சீசன் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு இந்த சீசன் மீது ஆர்வம் அதிகரிக்கும் அளவுக்கு ஆட்டம் இல்லை என்றாலும் நாளாக நாளாக இந்தப் போட்டி மீது ரசிகர்களுக்கு பிடித்துப் போன போட்டியாக மாறிவிட்டது. கடைசி வாரத்தில், தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளார்கள். அதாவது, முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, விஷால், பவித்ரா ஜனனி மற்றும் ரயான் உள்ளார்கள். இதில் கடைசி வாரத்தில் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் எவிட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சீசனில் முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் என்றால் அது, ஜாக்குலின் மட்டும் தான். பிக் பாஸ் வரலாற்றிலேயே 16 வாரங்களும் நாமிடேட் செய்யப்பட்டு கடைசி வாரம் வரை வீட்டில் இருந்த போட்டியாளர் என்றால் அது ஜாக்குலின் தான். அப்படி இருக்கும்போது, ஜாக்குலின் மிட் வீக் எவிக்ஷனில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமால், ஜாக்குலினுக்கு ஆதரவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள், குரல் கொடுத்து வருகின்றார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக ஜாக்குலின் இருப்பார் என எதிர்பார்த்துக் கொண்டு அவரது ரசிகர்கள் இருந்த நிலையில் ஜாக்குலின் மிட் வீக் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார். அதுவும், பணப்பெட்டி டாஸ்க் மூலம் ஜாக்குலின் எவிக்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அவரது ரசிகர்கள், ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் தனது உழைப்பினைச் செலுத்தியுள்ளார். அப்படி இருக்கும்போது, அவரை ஒரு டாஸ்க்கின் மூலம் வெளியேற்றுவது என்பது, முறையானது அல்ல என, தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பணப்பெட்டி: ஏற்கனவே பணப்பெட்டி டாஸ்க்கில், முத்துக்குமரன், ரயான் மற்றும் பவித்ரா கலந்து கொண்டு வெற்றியும் பெற்று, ஆட்டத்தில் தொடர்கின்றனர். இதில் முத்துக்குமரன் ரூபாய் 50 ஆயிரமும், ரயான் மற்றும் பவித்ரா தலா 2 லட்சமும் பணப்பெட்டியை எடுத்துள்ளனர். சௌந்தர்யா பணப்பெட்டியை எடுக்க முயற்சித்துவிட்டு பாதியிலேயே வீட்டிற்குள் திரும்பியுள்ளார். இப்படியான நிலையில் விஷால் பணப்பெட்டியை எடுக்க முயற்சிக்கின்றார் என்பது இன்றைய ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

ஆதரவு: இந்த டாஸ்க்கின் மூலம் ஜாக்குலின் வெளியேற்றப்பட்டிருப்பதான தகவல், ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலின் பிக் பாஸ் வீட்டில் பலமுறை முத்துகுமரனிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். அது, டைட்டிலை தான் வெல்ல வேண்டும், அப்படி தனக்குப் பிறகு யாரிடமாவது டைட்டில் செல்ல வேண்டும் என்றால் அது உன்னிடம்தான் அதாவது முத்துகுமரனிடம் டைட்டில் செல்ல வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்தார். இதனால், முத்துக்குமரனின் ரசிகர்கள் ஜாக்குலினுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











