ஆரம்பமே இப்படியா? புகழ்ந்து பேசிய ரஞ்சித்.. நோஸ் கட் கொடுத்த விஜய் சேதுபதி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கும் நிலையில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவிந்தர். வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தற்போது விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளரையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

சுனிதா கோகோய்: இதில் ஏழாவது போட்டியாளராக உள்ளே வந்தார் சுனிதா கோகோய், டான்ஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி என பலவற்றில் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்த இவர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் பேசினார். அதில், பெண் குழந்தைகளை பக்கத்து வீட்டிற்கு கூட, அனுப்ப மாட்டாங்க. ஆனால், என் மீது இருந்த நம்பிக்கையில் அசாமில் இருந்த என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு ரொம்ப நன்றி என்றார். இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கு அழகான கவிதைகளை சொல்லி அவரை மகிழ்வித்தார்.

bigg boss tamil bigg boss tamil season 8 bigg boss tamil 8 8

Jefry : இதையடுத்து எட்டாவது போட்டியாளராக கானா பாடகரான Jefry கலந்து கொண்டார். பிக் பாஸ் மேடையில் உருக்கமான பேசிய அவர், இந்த மேடையில் என்னை பார்த்து அம்மா சிரித்த முகத்தோடு இருக்கிறார்கள் உண்மையில் அம்மா சிரிக்கல அவர்களுக்கு இருக்கும் கஷ்டத்திற்கு அவர்களால் சிரிக்க முடியாது. அவங்க முகத்தில் உண்மையான சிரிப்பு வர வேண்டும் என்றால் நான் பிக் பாஸ் வீட்டிற்கு போக வேண்டும் என்று பேசினார். இதைப்பார்த்து கண்கலங்கிய விஜய் சேதுபதி, பிக் பாஸ் பரிசை கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

10 ரஞ்சித்: ஒன்பதாவது போட்டியாளராக ரஞ்சித் களமிறங்கி உள்ளார். என்னை பல படத்தில் பல பல பெயரில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், முதன் முதலாக ரஞ்சித்ததாக என்னைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு சிலர் பெயருக்காக வருவார்கள், பணத்திற்காக வருவார்கள் எனக்கு இவை அனைத்தும் இருக்கிறது. இருந்தாலும் நான் அன்பை விதைப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன். நான் நானாக இருப்பேன் என்றார்.

சரியான நோஸ்கட்: இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதி, நீங்கள் தயாரித்த பீஸ்மர் படம் பார்த்தேன் அந்த படத்தில் நீங்கள் ஒரு நண்பராக தெரிந்தீர்கள். ஆனால் கவுண்டம்பாளையம் படத்தில் வேறு ஒரு ரஞ்சித்தை நான் பார்த்தேன் என்றார். இதற்கு, ரஞ்சித் மழுப்பலாக பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து, நீங்கள் இந்த நிகழ்ச்சியில் உண்மையான இருப்பீர்களா, பெட்டராக இருப்பீர்களா என்று கேட்க, நான் உண்மையாக இருப்பேன் என்றார். அதன் ரஞ்சித் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேச, போதும் போதும் என்பது போல சொல்லி விட்டு, உள்ளே போய் நிறைய விஷயத்தை கத்துக்கொடுங்க என்று சரியான நோஸ் கட் கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X