Bigg Boss: சிவகுமார் எலிமினேட் செய்யப்பட்டதில் பாலிடிக்ஸ்..சுஜா பகிர்ந்த மீம்.. விஜய் சேதுபதி டேமேஜ்
சென்னை: தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. கடந்த ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இம்முறை அதிலிருந்து விலகினார். இதனால் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் நேற்று அதாவது டிசம்பர் ஒன்றாம் தேதி போட்டியின் எட்டாவது வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளரான சிவகுமாரின் மனைவி சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை பிக் பாஸ். முதலில் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்ற தகவல் வெளியான நிகழ்ச்சியில் பெரும் கவனம் ஏற்பட்டது. முதல் சீசனில் இருந்தே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல காரணமாக இருந்தனர்.

அதே நேரத்தில் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி திரைத்துறையில் தன்னை வளர்த்தி வரும் கலைஞர்களும் உள்ளனர். கடந்த ஏழு சீசனங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து வரும் பல பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றனர். அந்த வகையில் கலந்து கொண்ட நேரடி போட்டியாளர்கள் தொடங்கி வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் வரை அனைவருமே மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே விளையாடி வருகின்றனர்.
ரசனை: இதன் காரணமாகவே பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த சீசன் வரவேற்பை பெறாமலே போய்விட்டது. போட்டியாளர்கள் கிட்டத்தட்ட 30 லிருந்து 40 நாட்கள் வரை கால அவகாசம் கொடுத்து பார்த்த பிக் பாஸ் டீம், ஒரு கட்டத்தில் சலிப்பை எட்டி விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அதாவது கடந்த மூன்று வாரங்களாகவே வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டீம் கொடுத்து வருகிறது. இதனால் கடந்த மூன்று வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் ரசிக்கும்படியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விமர்சிக்கப்பட்ட கமல்: கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட போது அந்த சீசனின் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் பிக் பாஸ் ரசிகர்களால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பல விஷயங்களில் கமல்ஹாசனின் நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்த சீசன் இல்லை விஜய் சேதுபதி முதல் சில வாரங்களில் பாராட்டுகளை பெற்று வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறார் என்று தான் கூற வேண்டும்.
சுஜா மீம்: அந்த வகையில் இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளரான சிவக்குமாரின் மனைவி சுஜா விஜய் சேதுபதியை மிகவும் கடுமையாகவும் நேரடியாகவும் விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஸ்டோரியில், ஆறாவது இடத்திலிருந்த சிவகுமார் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் கடைசி இடத்தில் இருந்த சாச்சனா காப்பாற்றப்பட்டுள்ளார். இதற்கு காரணம் விஜய் சேதுபதி தான் என்பது போல சுஜா பகிர்ந்துள்ள மீமில் உள்ளது.

விஜய் சேதுபதி நடவடிக்கை: வழக்கமாக எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள அல்லது செய்யப்படவுள்ள நபரை விஜய் சேதுபதி தான் அறிவிப்பார். அப்படி இல்லை என்றாலும் எலிமினேஷன் நடைபெறும் பொழுது விஜய் சேதுபதியும் அதில் ஒரு நபராக இருப்பார். ஆனால் சிவக்குமார் விஷயத்தில் விஜய் சேதுபதி, எலிமினேஷன் பிராசஸை பிக் பாஸ் செய்வார் என கூறிவிட்டு சென்றுவிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. விஜய் சேதுபதியும் இந்த நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை தான் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான மீம் சுஜாவால் பகிரப்பட்டு உள்ளதால் இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











