Bigg Boss 8 : பிக்பாஸ் என்ன என்னோட புருசனானு கேட்ட சௌந்தர்யா.. வாய பொழந்துட்டு பார்த்த ஜாக்குலின்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து தொடங்கி மிகச் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன், அடுத்த 24 மணி நேரத்திற்குள் 17 போட்டியாளர்களாக குறைந்தது. கடந்த சீசன் எப்படி பிக் பாஸ் மறும் ஸ்மால் பாஸ் என்ற தீம் உடன் நடைபெற்றதோ, அதேபோல் இந்த சீசனில் ஆண்கள் அணி - பெண்கள் அணி என்ற கட்டமைப்பிலேயே வீட்டினை வடிவமைத்துள்ளனர். இதனால் இந்த சீசன் ஆண்கள் - பெண்கள் என்ற கான்செப்ட் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

bigg boss 8 tamil oundariya nanjundan jacquline

இந்நிலையில் இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பலான போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்தே தேர்வு செய்துள்ளதாக ரசிகர்கள் ஒருபுறம் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் விஜய் டிவியில் இருந்து சென்றவர்கள் ஒரு கூட்டுக் கிளியாக இல்லாமல், விஜய் டீவியில் பணியாற்றியபோது ஏற்பட்ட சின்னச் சின்ன பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் கேம் ஆடுவதுபோலத் தெரிவதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

bigg boss 8 tamil oundariya nanjundan jacquline

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைச் சச்சரவுகள் எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எக்கச்சக்க நகைச்சுவை நிகழ்வுகளும் நடைபெறும். இதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களிலேயே அதிக ஃபன் மொமண்ட் இருந்த சீசன் என்றால் அது சீசன் 3தான். அதற்கு முக்கிய காரணம் சாண்டி மாஸ்டர், கவின், தர்ஷன், லாஸ்லியா மற்றும் முகின் ராவ் ஆனால் அதே சீசனில் வனிதா மிகவும் டெரராக காணப்பட்டார். அந்த சீசனில் இருந்த ஃபன் எலமெண்ட் இனி வரும் சீசன்களில் கிடைக்குமா என்றால் அது கேள்விக் குறிதான்.

bigg boss 8 tamil oundariya nanjundan jacquline

வீட்டுக்காரரா?: ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல் இந்த சீசனிலும் சில ஃபன் எலமெண்ட் கொடுக்க சிலர் உள்ளார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது போட்டியாளர்கள் சௌந்தர்யா நஞ்சுண்டன், ஜாக்குலின் மற்றும் ஜெஃப்ரி என மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு உள்ளார்கள். அப்போது சௌந்தர்யா தனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் எனக் கூறுகின்றார். மேலும் தனக்கு சாக்லெட் வேண்டும் எனவும் கூறுகின்றார். உடனே ஜாக்குலின், பிக் பாஸிடம் கேள் உனக்கு கிடைக்கும் எனக் கூறுகின்றார். ஜாக்குலின் இவ்வாறு சொன்னதும், 'பிக் பாஸ் என்ன என்னோட வீட்டுக்காரங்களா, எதாவது டாஸ்க் செய்யச் சொல்லுவார்' என கேள்வி எழுப்புகின்றார்.

bigg boss 8 tamil oundariya nanjundan jacquline

பேக்கரி: இப்படியான நிலையில், ஜாக்குலின் தொடர்ந்து உனக்கு என்ன வேண்டும் என கேட்க, 'சாக்லெட், ஐஸ்கிரீம், எங்க பேக்கரி பப்ஸ் வேண்டும்' என்கின்றார். இதனைக் கேட்ட ஜாக்குலின் மற்றும் ஜெஃப்ரி, என்னது பேக்கரியா? நீங்க பேக்கரி வெச்சு இருக்கீங்காளா? எனக் கேள்வி கேட்டனர். அதற்கு சௌந்தர்யா நஞ்சுண்டன், 'ஆமாம், எங்க அப்பா வெச்சு இருக்காரு, சென்னையிலதான் வெச்சு இருக்காரு ' எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

bigg boss 8 tamil oundariya nanjundan jacquline

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X