Soundarya: யார் தயவும் தேவையில்லை.. இன்ஸ்டாகிராமில் தெறிக்கவிட்ட சௌந்தர்யா.. ரசிகர்கள் அன்பு மழை!
கோவை: பிக் பாஸ் சீசன் 8இல் இரண்டாவது இடம் பிடித்தவர் சௌந்தர்யா நஞ்சுண்டன். மாடலிங், சினிமாக்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த சௌந்தர்யாவை தமிழ்நாட்டு மக்களிடமும் தமிழ் பேசும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிதான். சௌந்தர்யா இன்று அதாவது, பிப்ரவரி 16ஆம் தேதி கோவையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு வழிபடச் சென்றுள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. தனது மேனரிசம், சிரிப்பு, கூந்தலை வாரி விடும் ஸ்டைல் என ரசிகர்களின் மனம் கவர்ந்த சௌந்தர்யா, இந்த சீசனின் மிகவும் சவாலான போட்டியாளராகவும் இருந்தார். ஒரு வாரம் கூட கேப்டனாக செயல்படாத சௌந்தர்யா, முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை வீட்டில் இருந்தார். தன்னால் முடிந்த டாஸ்க்குகளில் கலக்கவும் செய்தார். இதுவும் அவர் இறுதி மேடையில் நிற்க காரணமாக அமைந்தது.

ஃபேமிலி மற்றும் ஃப்ரண்ட்ஸ் வாரத்தில், தனது காதலரும் கடந்த சீசனில் போட்டியாளராக இருந்து டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று இறுதி மேடைக்கு சென்ற, விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது, அவரிடத்தில் தனது காதலை வெளிப்படுத்தினார். குறிப்பாக வில் யூ மேரி மீ' என எழுதி விஷ்ணுவிடம் நீட்டினார். இது தொடர்பான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவியது. போட்டியாளர்கள் பலரும், விஜய் சேதுபதியிடம் பேச பயந்த போது, சௌந்தர்யா மட்டும் விஜய் சேதுபதிக்கும் தக் லைஃப் கொடுத்து வந்தார்.

சவுண்ட்: சௌந்தர்யாவுக்கான பி.ஆர் டீம் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை வீடியோ துணுக் களைப் பயன்படுத்தி ஆதரவு திரட்டி வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே சௌந்தர்யாவுக்கு ஆதரவான எண்ணங்கள் இருந்ததால், சௌந்தர்யா குறித்து யாரவது மதிப்பு குறைவாக பேசினால், அவர்களிடம் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக நின்று பேசியுள்ளார்கள். பிக் பாஸ் வீட்டில் சௌந்தர்யாவின் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்றால், அது ஜாக்குலின் மற்றும் ரயான் மட்டும்தான்.

பிக் பாஸ் ஃபைனல்: இரண்டாவது இடம் பிடித்த போது கூட, விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியபோது, 'நான் கூட பயந்துட்டேன் சார், நீங்க என் கையைத்தான் தூக்கிடுவீங்களோன்னு, நீங்க மட்டும் என் கையைத் தூக்கி இருந்தால், என் அப்பா வந்து கோப்பையை வாங்கி முத்துகுமரனிடம் கொடுத்திருப்பார்' எனக் கூறி அனைவரையும் ரசிக்க வைத்தார். மேலும் தான் டைட்டில் வின்னர் ஆனால் அந்தப் பணத்தை நான் அப்படியே எனது அப்பாவிடம் கொடுத்து விடுவேன் எனக் கூறினார்.

போஸ்ட்: இப்படியான நிலையில் பிக் பாஸ் முடிந்த பின்னர், சில படங்களில் சௌந்தர்யா கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில், சௌந்தர்யா கோவையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவிலான மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர், தரிசனம் முடித்துவிட்டு, கோவில் வாசலில் நின்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது புகைப்படங்களுக்கு ஜெய் பீம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளை கேப்ஷனாக இட்டுள்ளார். அதாவது 'உன்னை நம்பி நீ போகையில பாதை உண்டாகும்' என்ற பாடல் வரிகளை கேப்ஷனாக இட்டுள்ளார். தான் தன்னை நம்பி பயணிப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சிலர் கமெண்ட்டில் தெரிவித்து உள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு கமெண்ட் செக்ஷனில் அன்பைப் பொழிந்து வருகிறர்கள்.



Click it and Unblock the Notifications











