Bigg Boss Tamil: டாஸ்க் பீஸ்ட்னா சும்மாவா.. ரூபாய் 2 லட்சம் பெட்டியை தட்டித் தூக்கிய ரயான்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 முடிவு நாட்களை நெருங்கிவிட்டது. மொத்தம் 18 நேரடி போட்டியாளர்கள், 6 வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் என 24 போட்டியாளர்களில் இருந்து தற்போது டாப் 6 போட்டியாளர்கள் இன்னும் ஆட்டத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு இடையில் போட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இப்படியான நிலையில் இந்த சீசனில் இதுவரை இரண்டு முறை பணப்பெட்டிகள் வைக்கப்பட்டு அதனை போட்டியாளர்களான முத்துக்குமரன் மற்றும் ரயான் வெற்றிகரமாக எடுத்துள்ளார்கள். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
எப்போதுமே இறுதி வாரத்திற்கு முன்னர், போட்டியாளர்களில் இருந்து யாராவது ஒருவரை வெளியேற்ற பணப்பெட்டி வைக்கப்படும். பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் போட்டியாளர், ஆட்டத்தில் இருந்து வெளியேறுவார். அப்படி இருக்கும்போது, இந்த சீசனில் பணப்பெட்டி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து வைக்கப்படுகின்றது. அதில் முதல் நாளில் முத்துக்குமரன் ரூபாய் 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டியை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று ரூபாய் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை பிக் பாஸ் தரப்பில் வைத்துள்ளனர். அந்த பெட்டியை போட்டியாளர் ரயான் எடுத்து அசத்தியுள்ளார்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், பணப்பெட்டி இம்முறை, வீட்டிற்குள் வைக்காமல், வீட்டை விட்டு வெளியே வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்கும் போட்டியாளர்கள் பணத்தை வெல்வது மட்டும் இல்லாமல், தொடர்ந்து போட்டியிலும் நீடிக்கலாம். பணத்தின் அளவினைப் பொறுத்து கொடுக்கப்படும் நேரமும், தூரமும் அதிகமாக உள்ளது.
ரயான்: ஏற்கனவே ரூபாய் 50 ஆயிரத்திற்கான, பணப்பெட்டியை எடுத்துவிட்டார். இப்படியான நிலையில், ரூபாய் 2 லட்சத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை 45 மீட்டர் இடைவெளியில் பிக்பாஸ் குழு வைத்துள்ளது. அப்படி இருக்கும்போது, அதனை 25 நொடிகளில் எடுத்துவிட்டு வீட்டிற்குள் வரவேண்டும் என விதிமுறையும் விதிக்கப்பட்டது. பணத்தினை எடுக்க, போட்டியாளர் ரயான் முன்னே வந்தார்.

டாஸ்க் பீஸ்ட்: ரசிகர்கள் மத்தியில் டாஸ்க் பீஸ்ட் என பெயர் பெற்ற, ரயான், இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிடுவார் என சக போட்டியாளர்கள் வாழ்த்தினார்கள். அப்படி இருக்கும்போது 90 மீட்டர்கள் தொலைவினை ராயான் 17 நொடிகளில் வெற்றிகரமாக கடந்தது மட்டும் இல்லாமல், பணப் பெட்டியையும் வெற்றிகரமாக எடுத்து வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ரயான் ஏற்கனவே டாஸ்க்கில் அசத்தலாக விளையாடி, டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டினையும் வென்றார்.

பரிசுத் தொகை: பிக் பாஸ் டைட்டில் வெல்பவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் பரிசுப் பொருளாக வழங்கப்படும். மேலும் பணப்பெட்டியின் மூலம் எந்த அளவுக்கு பணம் எடுக்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு மொத்த பரிசுத்தொகையில் இருந்து பணத்தின் அளவு குறைந்து கொண்டு இருக்கும். அப்படிப் பார்த்தால் தற்போது மொத்த பரிசுத் தொகையில் இருந்து ரூபாய் 2.50 லட்சம் குறைந்துள்ளது. தற்போது டைட்டில் வின்னருக்கான மொத்த பரிசுத் தொகை ரூபாய் 47.5 லட்சங்களாக மாறியுள்ளது. இது இன்னுமும் குறைய அதிக வாய்ப்புகள் உண்டு.


Click it and Unblock the Notifications











