Bigg Boss 8: பிக் பாஸ் ஃபைனல் வோட்டிங் ரிசல்ட் இதுவா.. டைட்டில் வின்னர் முத்து இல்லையா? அலறும் இணையம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 முடிவுக்கு வந்து விட்டது. இன்றும் நாளையும் என இந்த சீசன் இரண்டு நாட்களில் மொத்தமுமாக முடியவுள்ளது. வெற்றியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ரசிகர்கள் தங்களின் அபிமான போட்டியாளருக்காக வாக்கு செலுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னரை தேர்வு செய்வதற்காக வோட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது, இதுதான் ஃபைனல் ரிசல்ட் என இணையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறித்தனமாக பார்த்து வருபவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இந்த சீசன் இதற்கு முந்தைய சிசன்களை விட முற்றிலும் வித்தியாசமானது. காரணம் இதற்கு முந்தய சீசன்களைத் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன். அவர் சில காரணங்களால் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த சீசனை தொகுத்து வழங்க, விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டார். இதுவே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது. அதன் பின்னர் எப்போதுமே ஆறாவது வாரத்தில்தான் வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்புவார்கள். ஆனால் இந்த சீசனில் 4வது வாரத்திலேயே அனுப்பினார்கள்.

அதற்கு காரணம், முதலில் சென்ற 18 போட்டியாளர்களும் ஆட்டத்தை சுவாரஸ்யமாக விளையாடவில்லை என்பதுதான் காரணம். வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே 6 போட்டியாளர்கள் சென்ற பின்னர்தான், ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. வீட்டிற்கு நடுவே கோடு, ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரித்து விளையாடியது. எவிக்ஷனில் இருந்து ஒருவரைக் காப்பாற்ற நாமினேஷன் ஃப்ரீ பாஸ். பணப்பெட்டியை எடுத்த பின்னரும் ஆட்டத்தில் தொடரலாம் என்பதெல்லாம் ரசிகர்களே எதிர்பார்க்காதது, இதனை போட்டியாளர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சீசன் 8: இப்படியான நிலையில் தற்போது வீட்டில் ஐந்து போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டாக உள்ளார்கள். அதில் ரயான் ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றவர். ஃபைனலிஸ்ட்டில் இவர் மட்டும்தான் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர். அதன் பின்னர், முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால் மற்றும் பவித்ரா என மொத்தம் 5 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளார்கள்.

வோட்டிங்: இவர்களில் யார் வெற்றியாளர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல், வெளியேறிய போட்டியாளர்களில் பலரும் கூறியது, டைட்டில் வின்னருக்கு தகுதியானவர், முத்துக்குமரன் தான். ரசிகர்களில் பலரும் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் எனக் கூறிவருகின்றனர். அதேபோல் சௌந்தர்யா டைட்டில் வின்னராக வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். சௌந்தர்யாவுக்கு ஆதரவாக அவரது, காதலர் விஷ்ணு சமூக வலைதளங்களில் அவருக்கான ஆதரவைத் திரட்டி வருகின்றார்.

டைட்டில் வின்னர்: இப்படியான நிலையில், இணையத்தில் குறிப்பாக ட்விட்டர் பக்கத்தில், பிக் பாஸ் சீசன் 8இன் வாக்கு முடிவுகள் இதுதான். சௌந்தர்யா டைட்டில் வின்னராகின்றார். முத்துக்குமரன் இரண்டாவது இடத்திலும், விஷால் மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளார். நான்காவது இடத்தினை பவித்ராவும், ஐந்தாவது இடத்தினை ரயானும் பெற்றுள்ளார்கள் என பகிரப்பட்டு வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் டைட்டில் வின்னர் முத்துக் குமரன் இல்லையா என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











