BB8 Manjari: நிஜமாவே டஃப் கன்டஸ்டன்ட்டா மஞ்சரி.. விஜய் சேதுபதி ஏன் அப்படி சொன்னாரு?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையப்போகின்றது. வாரம் இரண்டு போட்டியாளர்கள் என எவிக்ஷனும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளரையும் தனித்தனியே அழைத்து, அவர்களின் ஆட்டம் மற்றும் அடுத்து போட்டியை எவ்வாறு அணுக திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்து கேட்டுக் கொண்டார். இது மிகவும் சுவாராஸ்யமாக இருந்தாலும், சில போட்டியாளர்களுக்கு விஜய் சேதுபதி கூறிய அட்வைஸ் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக போட்டியாளர் மஞ்சரிக்கு சொன்ன அட்வைஸ் மற்றும் அவருடனான உரையாடல் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் போட்டியாளராக உள்ளே வந்த மஞ்சரி, விஜய் சேதுபதியிடம் பேசுகையில், நான் கடந்த 6 வாரங்களில் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் என வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு உணரவைத்துள்ளேன் என நம்புகின்றேன். மீதமுள்ள 5 வாரங்களில் அதை மக்களுக்கும் உணர்த்தும் வகையில் எனது ஆட்டம் இருக்க முயற்சி செய்வேன். நான் இறுதி மேடையில் உங்களுடன் நிற்க, நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எனக்கு ஒரு அறிவுரை கூறுகின்றீர்கள் என்றால் அது என்னவாக இருக்கும்? என மஞ்சரி விஜய் சேதுபதியை நோக்கி கேட்டார்.

விஜய் சேதுபதி: இதற்கு விஜய் சேதுபதி, " உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் சிறப்பாக விளையாடிக்கொண்டு உள்ளீர்கள். நான் எதாவது விமர்சனம் வைத்தால் அது தொடர்பாக நீங்கள் யோசிக்கின்றீர்களா? நீங்கள் யோசிப்பதன் விளைவு மக்களுக்கு வெளியே தெரிகின்றது. நீங்கள் யோசிக்கறீங்க என்பது தெரியுது. அது போதுமானது. உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து நீங்கள் யோசிப்பதும், அதன் ரிசல்ட்டும் அடுத்தடுத்த வாரங்களில் தெரிகின்றது என விஜய் சேதுபதி கூறினார்.

யோசனை: இவர்களுக்கு இடையிலான இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்தது. பல போட்டியாளர்களுக்கு அட்வைஸ் மேல் அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி, மஞ்சரிக்கு மட்டும் அட்வைஸ் கொடுக்காமல், குட் எனக் கூறியுள்ளது பலரையும் வியப்படையச் செய்துள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்னைகளில் மஞ்சரி, பல பிரச்னைகளில் தெளிவாகவே யோசித்து, பேசியுள்ளார். கடந்த வாரத்தில் அருண் கிச்சனில் பிரச்னை செய்தபோது கூட அருண் தவறாக புரிந்து கொண்டதை எடுத்துக் கூறினார். மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் சென்ற பெண் போட்டியாளர்களில் இப்போதுவரை வீட்டிற்குள் இருக்கும் ஒரே போட்டியாளர் மஞ்சர் மட்டும்தான்.
கடினம்: இந்த வாரத்தில் நடந்து வரும் பிரிக் டாஸ்க்கில் மஞ்சரி சிறப்பாகவே விளையாடி வருகின்றார். ஆனாலும் வரும் வாரங்களில் போட்டி இன்னும் கடினமாக இருக்கும் என்பதால், மஞ்சரி எந்த அளவுக்கு தனது வியூகத்தை வகுக்கப்போகின்றார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











